அரசியல்

"அதானியின் வீழ்ச்சி இந்திய ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கும்" -அமெரிக்க தொழிலதிபர் கருத்து !

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஜார்ஜ் சோரஸ் அதானியின் வீழ்ச்சி இந்திய அரசின் ஆட்சி மாற்றத்திற்கான, ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கக்கூடும் எனக் கூறியுள்ளார்.

"அதானியின் வீழ்ச்சி இந்திய ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கும்" -அமெரிக்க தொழிலதிபர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இரண்டு ஆண்டாக ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டை நாங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

"அதானியின் வீழ்ச்சி இந்திய ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கும்" -அமெரிக்க தொழிலதிபர் கருத்து !

அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிறுவனங்களில் பங்குகள் மூன்று ஆண்டுகளில் 819% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதிகமான கடனை பெற்றுள்ளன. இந்த 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களில் விகிதங்கள் 1%க்கும் கீழே உள்ளது. இதனால் பணப்புழக்க அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.

அதானி குழுமம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 3.9 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சரிவு பல நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

"அதானியின் வீழ்ச்சி இந்திய ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கும்" -அமெரிக்க தொழிலதிபர் கருத்து !

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு விசாரணையை தொடங்குவதாக அறிவித்தது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியும் அதானியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தும் முன்னாள் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஜார்ஜ் சோரஸ் அதானியின் வீழ்ச்சி இந்திய அரசின் ஆட்சி மாற்றத்திற்கான, ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கக்கூடும் எனக் கூறியுள்ளார்.

"அதானியின் வீழ்ச்சி இந்திய ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கும்" -அமெரிக்க தொழிலதிபர் கருத்து !

இது தொடர்பாக பேசிய அவர், "அதானி குழுமத்தின் வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தை மீதான நம்பிக்கையை குலைத்துப் போட்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதானிக்குமான உறவு பல கேள்விகளை எழுப்பி வருகிறது. அந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லாமல் மோடி மௌனம் காக்கிறார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவரது பதிலுக்காக காத்திருக்கிறார்கள். இது இந்திய அரசின் ஆட்சி மாற்றத்திற்கான, ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கக்கூடும்" என கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories