அரசியல்

"சிவசேனாவை உடைத்தது நாங்களே.. ஆனால் அது எளிதாக இல்லை"- பா.ஜ.க அமைச்சர் பேச்சால் சர்ச்சை !

சிவசேனாவை உடைப்பது எங்கள் இலக்காக இருந்தது; ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என பாஜக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

"சிவசேனாவை உடைத்தது நாங்களே.. ஆனால் அது எளிதாக இல்லை"- பா.ஜ.க அமைச்சர் பேச்சால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பா.ஜ.க தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

"சிவசேனாவை உடைத்தது நாங்களே.. ஆனால் அது எளிதாக இல்லை"- பா.ஜ.க அமைச்சர் பேச்சால் சர்ச்சை !

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கியது பா.ஜ.க தான் என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்ட நிலையில், அதை ஆரம்பத்தில் பா.ஜ.க மறுத்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸே பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

"சிவசேனாவை உடைத்தது நாங்களே.. ஆனால் அது எளிதாக இல்லை"- பா.ஜ.க அமைச்சர் பேச்சால் சர்ச்சை !

இந்த நிலையில், சிவசேனாவை உடைப்பது எங்கள் இலக்காக இருந்தது; ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என பாஜக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஆட்சி கவிழ்ப்பு மஹாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறுகையில், "சிவசேனாவை உடைப்பதுதான் பாஜக-வின் இலக்கு. ஆனால், அது மிகவும் எளிதாக இல்லை. முதலில் 17 முதல் 18 வரை கட்சியிலிருந்து வெளியேறினர். அவர்களை 50 பேராக அதிகரிப்பது மிகவும் சிரமமாகவே இருந்தது. ஏக்நாத் ஷிண்டே எப்படி முதல்வரானார்?. அதைப்பற்றி நினைத்துப்பார்த்தால் எங்களால் நம்ப முடியவில்லை. ஆனால் எங்களது ஆபரேசனை தொடங்கினோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories