அரசியல்

"மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்றே தெரியாது" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை என ஒன்றிய அரசு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

"மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்றே தெரியாது" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து அங்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

ஆனால், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வரை சுற்றுசுவரோடு நிற்கிறது. அதோடு சமீபத்தில் தமிழ்நாடு வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ்ஸில் 95% பணிகள் முடிவடைந்தது என்று கூறியது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்றே தெரியாது" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !

ஒன்றிய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து ஆர்டிஐயில் (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள், "மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1977.8 கோடியில், 82 சதவீதமான ரூ.1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைகா நிறுவனம் வழங்கும். 20 சதவீத தொகையான ரூ.350.1 கோடியை ஒன்றிய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் வழங்கும். அக்டோபர் 2026ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும். கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை" எனக் கூறியுள்ளனர்.

"மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்றே தெரியாது" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !

தமிழ்நாட்டுக்கு பின் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு சில எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறந்துவைக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசுக்கு அதிக வருவாய் கொடுக்கும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசு புறக்கணிப்பது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories