அரசியல்

TV பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்யா ? அம்பலமாகிப் போன பழனிசாமியின் உண்மை முகம்!

தூத்துக்குடி வன்முறை தொடர்பாக அனைத்து விபரங்களையும் தெரிவித்தும் பழனிசாமி நடவடிக்கை எடுக்காதது வியப்பை தருகிறது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TV பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்யா ? அம்பலமாகிப் போன பழனிசாமியின் உண்மை முகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விரிவான விசாரணை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

TV பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்யா ? அம்பலமாகிப் போன பழனிசாமியின் உண்மை முகம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில், குறிபார்த்த சுடக்கூடிய துப்பாக்கிகளை போலிஸார் பயன்படுத்தியது உடற்கூறு ஆய்வில் தெரியவருகிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பின்னந்தலை வழியாகக் குண்டு துளைத்து, முன் தலை வழியாக வெளியேறியுள்ளது. சிலருக்கு முதுகின் பின்பகுதியில் குண்டு துளைத்து, இதயம் போன்ற முக்கிய பகுதியைச் சிதைத்து மார்பின் முன்பகுதி வழியாக வெளியேறியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்யவில்லை. காவலர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் போராட்டக்காரர்களைப் பார்த்த சுட்டுள்ளார். அவர் ஆட்சியர் அலுவலகம், 3 ஆம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் ஆகிய நான்கு இடங்களில் சுட்டுள்ளார். இவரை அடியாள்போல் காவல்துறை பயன்படுத்தியுள்ளது.

போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் அதற்கு ஏற்ப காவல்துறை அதிகாரிகள் தயாராக இல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். போராட்டத்தின் போது எந்த காவலருக்கும் படுகாயம் அடையவில்லை. போலிஸார் மறைந்திருந்து பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

TV பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்யா ? அம்பலமாகிப் போன பழனிசாமியின் உண்மை முகம்!

இந்த போராட்டத்தின் தொடக்க முதலே அப்போதைய ஆட்சியர் வெங்கடேஷ் அலட்சியத்துடனே இருந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு டு சம்பவம் தொடர்பாக 17 காவல்துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சர்கார், எஸ்.பி பி.மகேந்திரன், டி.எஸ்.பி லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ, தலைமை காவலர் ஒருவர், 7 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

TV பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்யா ? அம்பலமாகிப் போன பழனிசாமியின் உண்மை முகம்!

மேலும், இந்த துப்பாக்கி சூடு நடந்தபோது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்த துப்பாக்கி சூட்டை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டதாக கூறியிருந்தார். ஆனால் ஆணையத்தின் விசாரணையில் எடப்பாடி பொய் கூறியது அப்பட்டமாக தெரியவந்தது.

விசாரணை ஆணையத்தின் அறிக்கையில், மீனவர் சங்கத்தை சந்தித்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டாமென்று கோரிக்கை வைக்கலாமென முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசனை கூறப்பட்டது. சேலத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து அப்போதைய டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனையை வழங்கினார். முதல்வர் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தவிர போராட்டத்தின் போது அப்போதைய தலைமை செயலர் கிரிஜா, டி.ஜி.பி, உளவுத்துறை அனைத்து விபரங்களையும் தெரிவித்தும் பழனிசாமி நடவடிக்கை எடுக்காதது வியப்பை தருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories