அரசியல்

"மீண்டும் மொழிப்போர் வந்துவிடக்கூடாது என்பதால் தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்" -கனிமொழி MP பேட்டி

பிற மொழியை கற்க வேண்டும் என்று வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது என்று கோவையில் தி.மு.க எம்.பி கனிமொழி பேட்டியளித்துள்ளார்.

"மீண்டும் மொழிப்போர் வந்துவிடக்கூடாது என்பதால் தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்" -கனிமொழி MP பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிற மொழியை கற்க வலியுறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மொழி என்பது நம்முடைய அடையாளம்; நம்மை பற்றியும், நம் வரலாற்றை பற்றியும் தெரிந்துக்கொள்ள அது உதவுகிறது. இது நம்முடைய தகவல் தொடர்பிற்கான மொழி மட்டுமல்ல; இது நமது அடையாளம், சுயமரியாதை. தமிழகத்தில் மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார்.

"மீண்டும் மொழிப்போர் வந்துவிடக்கூடாது என்பதால் தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்" -கனிமொழி MP பேட்டி

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. உலகத்தை தொடர்புகொள்ள ஆங்கிலம்; நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. மொழிப் போர் குறித்து ஒரு கதவு போதுமானது என அறிஞர் அண்ணா அன்றே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைபாடு.

"மீண்டும் மொழிப்போர் வந்துவிடக்கூடாது என்பதால் தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்" -கனிமொழி MP பேட்டி

இந்தியாவை பொறுத்தவரை schedule 8-ல் மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் பார்க்க வேண்டும். சில மொழிகளை, அலுவல் மொழிகளாக கொண்டு வர நினைக்கிறார்கள். ஆனால் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories