அரசியல்

சீன அதிபர் கைதா .? ஜாலிக்காக வீடியோ வெளியிட்ட அமெரிக்க பெண்ணால் பரபரப்பான உலகம் ! நடந்தது என்ன ?

சீன அதிபர் குறித்து ஜாலிக்காக பெண் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீன அதிபர் கைதா .? ஜாலிக்காக வீடியோ வெளியிட்ட அமெரிக்க பெண்ணால் பரபரப்பான உலகம் ! நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் ஊழல் வழக்கில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன அதிபருக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து நேற்றில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிபர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்றும், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்றும் தகவல் பரவியது. அதுமட்டுமின்றி ராணுவம் ஜி ஜின்பிங்கை கைது செய்து வீட்டு சிறையில் அடைந்ததாகவும் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சீன அதிபர் கைதா .? ஜாலிக்காக வீடியோ வெளியிட்ட அமெரிக்க பெண்ணால் பரபரப்பான உலகம் ! நடந்தது என்ன ?

இந்தியாவில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் இந்தத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது குறித்து சீன அரசு தரப்பில் எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இது தொடர்பாக உண்மை தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த சீனப் பெண் பிரஜை ஒருவர், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அவர் முகாமில் இருக்கும் போது பொழுதை கழிப்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டாக கூறியுள்ளார்.

சீன அதிபர் கைதா .? ஜாலிக்காக வீடியோ வெளியிட்ட அமெரிக்க பெண்ணால் பரபரப்பான உலகம் ! நடந்தது என்ன ?

இதனை கண்ட சிலர் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் விவாதித்த நிலையில், இந்த தகவல் வைரலாகியுள்ளது. மேலும், பலரும் இதனை உண்மை என்று நினைத்து கருத்து பதிவிட்ட நிலையில், சில ஊடகங்களும் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories