அரசியல்

போராடுவதற்கு காரணம் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் : பா.ஜ.கவினர் குறித்து அமைச்சர் பரிதாபம்!

முதலமைச்சர் சிந்தனை சரியில்லை என கூறியவரின் சிந்தனை சரியில்லததால்தான் அவரது கட்சியிலே அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு சாடியுள்ளார்.

போராடுவதற்கு காரணம் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் : பா.ஜ.கவினர் குறித்து அமைச்சர் பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால் தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என பாஜக போராட்டம் நடத்துகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஏழு கிணறு பகுதியில் அவர் வாழ்ந்த இல்லத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வள்ளலாரின் திருவுருவ படத்திற்கு மலை அணிவித்து மரியாதை செலுதினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சென்னை ஏழு கிணறு பகுதியில் 55 ஆண்டு காலம் வாழ்ந்த வள்ளலார் இந்த இல்லத்தில் 33 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். முதலமைச்சர் அனுமதியோடு வள்ளலாருக்கு மரியாதை செலுத்தி அன்னதானத்தை தொடங்கி வைத்துள்ளோம்.

வள்ளலார் பெருமைகள், சமத்துவம், பசி என்பதை நாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும் போன்ற வள்ளலாரின் அரும்பணிகளை பெருமைபடுத்தும் விதமாக 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தற்கான வரபடங்கள் கோரி விளம்பரப்படுத்தியுள்ளோம். விரைவில் டெண்டர் கோரப்பட்டு வள்ளலார் சர்வதேச மையம் வெகு விரைவில் கட்டப்படும். மேலும், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை புனரமைக்க அரசு உதவி செய்யும் என கூறினார்.

முதலமைச்சர் அதிவேகமாக மக்கள் நலப்பணிகளை செய்வதால் Dangerous என எச்.ராஜா கூறியிருக்கலாம். மேலும் முதலமைச்சர் சுயமாக சிந்தித்து, சுயமாக முடிவெடுப்பதால்தான் நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சுயமாக சிந்திப்பதால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக்கியுள்ளனர். முதலமைச்சர் சிந்தனை சரியில்லை என கூறியவரின் சிந்தனை சரியில்லததால்தான் அவரது கட்சியிலே அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

அன்னை தமிழில் வழிபாடு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அன்னை தமிழில் வழிபாடு என்பதை மற்ற மொழிகளில் வழிபாடு இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால் தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக போராட்டம் நடத்துகின்றது.

ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படியே கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது. வார இறுதி நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக போராட்டம் நடத்துவது தேவையற்றது. இந்த நிலை ஆண்டு முழுவதும் தொடராது என்றும் கொரோனாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் கோயில்கள் திறக்கப்படும்.

banner

Related Stories

Related Stories