புதுக்கோட்டை முருகானந்தம் வீட்டில் இருந்து 83 சவரன் தங்க நகை, 3.7 கிலோ வெள்ளி மற்றும் 46 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கப்பணம், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித் துறையின் உதவியாளருமான முன்னாள் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆதரவாளருமான முருகானந்தம் மற்றும் அவரது மனைவி 16 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முருகானந்தத்தின் சகோதரர்களான பழனிவேலு மற்றும் ரவிச்சந்திரன் சொந்தமான ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் 60வதுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து முருகானந்தம் மற்றும் அவருடைய மனைவி மற்றும் சகோதரர்கள் வீட்டு உள்ளிட்ட 6 இடங்களில் காலை 7 மணி முதல் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
கிட்டத்தட்ட 16 அரை மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் புதுக்கோட்டை சார்லஸ் நகர் பகுதியில் உள்ள முருகானந்தத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் கணக்கில் வராத 83 சவரன் தங்க நகை 3.7 கிலோ வெள்ளி மற்றும் 46 ஆயிரத்து 160 ரூபாய் பணம் மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதுபோக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 1260 சதவிகிதம் வருமானத்திற்கு அதிகமாக முருகானந்தம் சொத்து சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே எந்த நேரத்திலும் முருகானந்தமும் அவர்களது கூட்டாளிகளும் கைது நடவடிக்கைக்கு ஆளாகலாம் எனவும் கூறப்படுகிறது.