அரசியல்

டெல்லி அரசின் தூதரான சோனு சூட் : வருமான வரித்துறையை ஏவியதா பா.ஜ.க அரசு?

பாலிவுட் நடிகர் சோனு சுட் வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு.

டெல்லி அரசின் தூதரான சோனு சூட் : வருமான வரித்துறையை ஏவியதா பா.ஜ.க அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட பலருக்கு உதவியதாக இணையத்தில் பிரபலமானார் வில்லன் நடிகர் சோனு சூட்.

இருப்பினும், தவறான முகவரிகளை கொடுத்து உதவி கேட்டாலும் அவை நிறைவேற்றப்பட்டதாக சோனு சூட்டே தெரிவித்தது நெட்டிசன்களிடையே பெரும் சந்தேகத்தை கிளப்பியது.

மேலும், பாஜக மற்றும் மோடி அரசின் அபிமானியாக சோனு சூட் திகழ்கிறாரா என்றும் விமர்சனங்களையும், சந்தேகங்களையும் முன்வைத்தனர்.

இப்படி இருக்கையில், மும்பையில் உள்ள சோனு சூட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் டெல்லி அரசின் வழிகாட்டல் திட்டத்தின் விளம்பர தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்ட நிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சோனு இணையப்போவதாகவும் தகவல்கள் கசிந்தன. இப்படியான நிலையில் சர்வே என்ற பெயரில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் எதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்ற முழு விவரம் இதுகாறும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories