தமிழ்நாடு பா.ஜ.க மாநிலச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன், ஆபாச வீடியோ புகாரில் சிக்கி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஊடகவியலாளராக இருந்து வரும் மதன் ரவிச்சந்திரன்தான் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் ராகவன் தொடர்புடைய வீடியோவை ‘மதன் டைரீஸ்’ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக முன்னாள் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்த மதன் ரவிச்சந்திரனுக்கு பெரிதாக எந்தப் பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. ஆகையால் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொந்தயைச் சேர்ந்த மூத்த நிர்வாகியையே போட்டுக் கொடுத்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாஜகவின் மீது அவரது ஆதரவாளர்களுக்கே இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணங்களும் ஒழிந்து வருகிறது. ஏற்கெனவே இல.கணேசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற மூத்த தலைவர்களை ஓரம் கட்டியதை போன்று கே.டி.ராகவனையும் சிக்க வைத்திருக்கிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இது போன்ற அநாகரிக செயல்களை முதுகுக்கு பின்னால் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை ஆளப்போகிறோம் என்ற பகல் கனவுடன் திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இதுவெல்லாம் தேசியளவில் பெயர் பெற்ற ஒன்றிய அரசை ஆண்டுவரும் கட்சியா என்றும் பொது மக்கள் மத்தியில் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.