அரசியல்

“தமிழ்நாட்டில் 32% பேருக்குதான் ஒன்றிய அரசின் நிவாரணம் கிடைத்துள்ளது”: மோடியின் வெற்று அறிவிப்பு அம்பலம்!

கொரோனா முதல் அலையில் தமிழகத்தைச் சேர்ந்த 32 சதவீதம் பேருக்கு மட்டுமே ஒன்றிய அரசின் நிவாரணம் கிடைத்துள்ளது முழுமையாகக் கிடைக்கவில்லை என்று உலக வங்கி ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

“தமிழ்நாட்டில் 32% பேருக்குதான் ஒன்றிய அரசின் நிவாரணம் கிடைத்துள்ளது”: மோடியின் வெற்று அறிவிப்பு அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றின் முதல் அலை தீவிரமாக தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற பெயரில் 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரணத் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.

இதன்படி, சுகாதார பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் காப்பீடு, 80 கோடி ஏழை மக்களுக்கு 3 மாதங்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு வகை இலவசமாக வழங்கப்படும். இதில் ஜன்தன் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.500 தொடர்ந்து 3 மாதங்களுக்கு வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் ரூ.202 ஆக உயர்த்தப்படும். 3 கோடி மூத்த குடிமக்கள், ஏழை விதவைகள் மற்றும் ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 கருணைத் தொகை, பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.2,000 முன்கூட்டியே வழங்கப்படும். கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல நிதியை கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பயன் படுத்தி கொள்ளலாம்.

8 கோடி ஏழை குடும்பங்களுக்கு தொடர்ந்து 3 மாதங்களுக்கு இலவசமாக காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் ஒன்றிய அரசின் நிவாரண தொகுப்பில் இடம் பெற்றது. இந்நிலையில், இந்த நிவாரண உதவிகள் எத்தனை பேருக்கு சென்றடைந்துள்ளது என்பது தொடர்பாக சமீபத்தில் உலக வங்கி சார்பில் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 79 சதவீத ஏழைகள், பணம் மற்றும் உணவு பொருட்கள் என ஏதாவது ஒரு நிவாரணத்தை பெற்றுள்ளனர். இதில் 84 சதவீதம் பேர், கிராமப் புறத்தை சேர்ந்தவர்கள். 69 சதவீதம் பேர் நகர்ப் புறத்தை சேர்ந்தவர்கள். இந்திய அளவில், 39 சதவீதம் பேருக்கு உணவு பொருட்கள் மட்டும் கிடைத்துள்ளது.

இதில் கிராமப்புறங்களை சேர்ந் தவர்கள் 37 சதவிகிதம் பேர். நகர்ப் புறங்களை சேர்ந்தவர்கள் 40.ரூ பேர். இந்திய அளவில் 6.1 ரூ பேருக்கு பணம் மட்டும் கிடைத்துள்ளது. இதில் கிராமப் புறங்களில் 7 சதவீத பேர், நகர்ப்புறங்களில் 4.3 ரூ பேர். தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ், பயன்பெற தகுதியானவர்களில் 32 சதவீதம் பேருக்கு மட்டும் பணம் மற்றும் உணவு பொருள் என இரண்டும் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் 53 சதவீதம் பேர் இந்த திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் பெற பதிவு செய்தவர்களாக இருந்தனர். 37 சதவீதம் பேர், பணம் மற்றும் பொருள் என இரண்டும் பெற தகுதியானர்கள் என்று பதிவு செய்து இருந்தனர். இவர்களில் 62 சதவீத குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் மட்டுமே கிடைத்துள்ளது. 32 சதவீத குடும்பங்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் என இரண்டும் கிடைத்துள்ளன” என தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories