அரசியல்

காங்கிரஸ் அரசுகளுக்கான தடுப்பூசிகளை மடைமாற்றும் மோடி அரசு; பேரிடர் காலத்திலும் அரசியல் செய்யும் பாஜக!

தடுப்பூசிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்குத் திருப்பி விடப்படுவதாக மத்திய பா.ஜ.க. அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசுகளுக்கான தடுப்பூசிகளை மடைமாற்றும் மோடி அரசு; பேரிடர் காலத்திலும் அரசியல் செய்யும் பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான தடுப்பூசிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்குத் திருப்பி விடப்படுவதாக மத்திய பா.ஜ.க. அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங்தியோ, ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ரகுசர்மா, பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர்சிங் சித்து, ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா ஆகியோர் இதுதொடர்பாக காணொலி வாயிலாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

எங்கள் மாநிலங்களுக்கான தடுப்பூசி இருப்புகளை மத்திய அரசு மடைமாற்றிக் கொண்டது. இதனால் தற்போதைக்கு தடுப்பூசியே இல்லாத நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மே 1 முதல் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக, உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவை அணுகினால், தாங்கள் அனுப்ப முடியாத நிலையில் இருக்கிறோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 15 வரை தடுப்பூசி அனுப்பவே முடியாது என்று கூறுகின்றனர். அப்படியானால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி நாங்கள் தடுப்பூசி போடுவது? அனைவருக்கும் தடுப்பூசி போடும் திறன் எங்களிடம் உள்ளது. ஆனால், தடுப்பூசி இல்லை. எங்கள் மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசிகளை அனுப்பப்பட வேண்டும்.

காங்கிரஸ் அரசுகளுக்கான தடுப்பூசிகளை மடைமாற்றும் மோடி அரசு; பேரிடர் காலத்திலும் அரசியல் செய்யும் பாஜக!

தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும். மாநிலங்களிடம் போதுமான நிதி எங்களிடம் இல்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது. ‘ஒரே நாடு’, ‘ஒரே வரி’, ‘ஒரே அரசியலமைப்பு’ என பேசிவரும் மத்திய அரசு தடுப்பூசியையும் நாடு முழுவதும் இலவசமாக வழங்க வேண்டும்.

வங்கதேசத்திலிருந்து ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதிக்கும் மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ள விதம் தடுப்பூசி மீது அரசியல் விளையாடுவதையே காட்டுகிறது. நாடு தவறாக வழிநடத்தப்படுகிறது. பொங்கியெழும் தொற்றுநோய்களின் போது கூட பிரதமர் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்.

பிரதமர் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறார். கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும், மறுபுறம் மத்திய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அரசியலை எதிர்ப்பதற்கும் இரட்டை யுத்தத்தை நாங்கள் நடத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்

banner

Related Stories

Related Stories