அரசியல்

“ராமர் பெயரில் ஆன்மிக ஊழல் செய்யும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கும்பல்” - குமாரசாமி கடும் தாக்கு!

இன்னும் 15 நாட்களில், நீங்கள் பெட்ரோல் விலையை ரூ.100க்கு கொண்டு வருவீர்கள். இது தான் உங்களின் சாதனையாக இருக்கப் போகிறது என முன்னதாகவே குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

“ராமர் பெயரில் ஆன்மிக ஊழல் செய்யும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கும்பல்” - குமாரசாமி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராமர் கோவில் கட்டுவதற்கு என கர்நாடக மாநிலத்தில் வீடு வீடாகச் சென்று பா.ஜ.கவினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு நிதி கொடுக்காதவர்கள் வீடுகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி, மிரட்டி வருவதையும் கண்டித்து, மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் குமாரசாமிக்கு கண்டனம் தெரிவித்ததோடு, குமாரசாமிக்கு ராமர் மீது நம்பிக்கை இருந்தால் அவர் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்க வேண்டும் என்று கூறினர். அதனைக் கண்டித்து குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ராமர் பெயரை ஆட்சி அதிகாரத்துக்காக பயன்படுத்துவது ‘ஆன்மிக ஊழல்’ என்று குறிப்பிட்டார். "இறை பக்தியில் தன்னையோ, தனது தந்தை தேவகவுடாவையோ; கொண்டுள்ள நம்பிக்கை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் தேவகவுடா. அதே நேரத்தில், தான் சார்ந்த மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டுள்ள அவர், பிற மதங்களையும் மதிப்பவர். அவரைப் போல இறை நம்பிக்கை கொண்டவரும், கோவில்களுக்குச் சென்றவரும் வேறு யாரும் இல்லை. கடவுள் மீது எங்கள் குடும்பத்தினருக்கு இருக்கும் நம்பிக்கை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

நாங்கள் இறைவனுக்குச் செய்த பூஜைகள், ஹோமங்களில் கால் பகுதியைக் கூட எங்களைக் குறை சொல்பவர்கள் செய்திருக்க மாட்டார்கள். வேண்டுதல் வைத்து இறைவனை வழிபடுவது தவறு. அத்தகையச் சூழ்நிலையில், ராமர் பெயரை ஆட்சி அதிகாரத்துக்காக, பணத்திற்காக, அரசியலுக்காக பயன்படுத்துவது என்பது ஆன்மிக ஊழலாகும். ராமர் பெயரில் ஆன்மிக ஊழல் செய்பவர்களுக்கு, வரும் காலத்தில் உரிய தண்டனை கிடைக்கும்!’’ இவ்வாறு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories