அரசியல்

6 டெண்டர்களில் ரூ.6,133 கோடி ஊழல்.. பினாமி பெயரில் சொத்துகள்.. எடப்பாடி பழனிசாமியை சாடிய ஆர்.எஸ்.பாரதி!

1995இல் கலைஞர் எந்த வழியில் நடந்தாரோ, அதே வழியில் தலைவர் மு.க.ஸ்டாலின் நடக்கிறார். தி.மு.க எப்பொழுதும் உறுதியோடு செயல்படும் இயக்கம்.

6 டெண்டர்களில் ரூ.6,133 கோடி ஊழல்.. பினாமி பெயரில் சொத்துகள்.. எடப்பாடி பழனிசாமியை சாடிய ஆர்.எஸ்.பாரதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, தி.மு.க வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்தித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து ஆளுநரிடம் ஆதாரங்கள் சமர்பித்துள்ளோம். 17ஏ சட்டப்பிரிவு படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. அனைத்து குற்ற ஊழல் ஆவணங்கள் மீதும் ஆளுநர் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

ஜெயலலிதா மீதும் ஆளுநரிடம் முத்தமிழறிஞர் கலைஞர் 20 ஆண்டுக்கு முன் சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் புகார் கொடுத்து தாக்கல் செய்து பின்பு ஜெயலலிதா தண்டணை பெற்றார்.

அதன்படி, முதல் கட்டமாக 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு அளித்த 19 சொத்துக்கள் பினாமி பெயரில் வாங்கி சொத்து சேர்த்தனர்.

அனைத்து ஆவணங்களை கொண்ட ஆதாரம் உள்ளது. இந்தக் குற்றத்திற்காக 4-7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மனசாட்சிக்கு விரோதமாக கொரோனா காலத்தில் அரிசியிலும் ஊழல் நூற்றுக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

மருத்துவ உபகரணம் வாங்கியதில் ஊழல் அறிக்கை விரைவில் வரும். ஓ.பி.எஸ் மகனுக்கு, காக்னிசன்ட் நிறுவனம் ஊழல், துடைப்பம், ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் இருந்தும் அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துள்ளார். ரூ.450 வேண்டிய எல்இடி பல்பு 4,120 ரூபாய்க்கு வாங்கியுள்ளார் .

1,520 - 14,950 எல்இடி பல்பு கொள்முதல் ஊழல் நடைபெற்றுள்ளது. அமைச்சர் தங்கமணி தரமற்ற நிலகிரி கொள்முதல் செய்து 1000 கோடி ஊழல் செய்துள்ளார். 20 கோடியே 70 லட்சம் அமைச்சர் விஜயபாஸ்கர்- மருத்துவர், செவிலியர் பணிமாறுதல் ஊழல் ஆதாரத்துடன் உள்ளது.

குட்கா ஊழல் ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல், ரூ.1,950 கோடி பாரத் நெட் திட்டம் ஊழல், அமைச்சர் ஜெயக்குமார் வாக்கி டாக்கி 30 கோடி ஊழல். இதுகுறித்து சட்ட ஆலோசனை குழு ஆதாரத்துடன் அனைத்து தகவல்களையும் வைத்துள்ளது.

97 பக்க புகாரை ஆளுநர் ஆதாரத்துடன் கொடுத்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார். 1995இல் கலைஞர் எந்த வழியில் நடந்தாரோ, அதே வழியில் தலைவர் மு.க.ஸ்டாலின் நடக்கிறார். தி.மு.க எப்பொழுதும் உறுதியோடு செயல்படும் இயக்கம்.” இவ்வாறு கூறினார்.

banner

Related Stories

Related Stories