பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் கடந்த செப்டம்பர் 17ம் தேதி நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. ஆனால், வழக்கம் போல் பாஜகவினரின் விதிமீறல் நடவடிக்கைகள் அவர்களுக்கே வினையாக முடிந்திருக்கிறது.
அவ்வகையில் சென்னையை அடுத்த பாடி அருகே பாஜக விவசாய அணி சார்பாக பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. அதில், இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வுக்காக ஏற்பட்டு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக ஹீலியம் கேஸ்கள் பலூன்களில் நிரப்பட்டிருக்கிறது.
அந்த சமயத்தில், அக்கட்சியின் விவசாய அணி துணைத்தலைவர் முத்துராமனை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருகிறது. அந்த பட்டாசு பொறிகள் பலூன்கள் மீது பட்டதால் கேஸ் நிறைந்த பலூன்கள் வெடித்து சிதறியிருக்கிறது.
இதனால் முத்துராமன் உள்ளிட்ட மூவர் இந்த வெடி விபத்தில் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இதனையடுத்து மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, விபத்து நடந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதோடு Happy Birthday, Have a blast என்ற சொற்றொடரை பாஜகவினர் தவறாக புரிந்துகொண்டிருப்பார்கள் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு காவல் துறையிடம் பாஜகவினர் முறையான அனுமதி பெறவில்லை என்றக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.