அரசியல்

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?

ஜெகத் ரட்சகன் வழக்கின் உண்மை நிலை என்ன என்பதே இந்த கட்டுரை..

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமீப காலமாக மீடியாக்களில் திட்டமிட்டு பூதாகரமாக்கப்பட்டு வருகிறது முன்னாள் அமைச்சர் ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு!

அது என்ன வழக்கு என்று இவர்கள் தேடிப்பார்த்திருந்தால், அது என்ன வழக்கு என்றும் அதில் ஜெகத் ரட்சகன் ரோல் என்ன என்பதும் அவர்களுக்கு தெரிய வந்திருக்கும்.

உண்மையை அறிய மனமில்ல்லாமல் யாராவது சொன்னதை அப்படியே எழுதும் பழக்கம் முற்றிப் போனதால், ஜெகத் ரட்சகன் வழக்கின் உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் போய்விடுகிறது.

அந்த வழக்கு இதுதான்:

கடந்த 1917ஆம் ஆண்டில் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் சேம்பர் (George Alexander Chamber) என்பவர் சேம்பர் & கோ (Chamber & Co.) என்ற பெயரில் தோல் வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு 3 மனைவிகள் முதல் மனைவி மூலம் கே.ஹெச்.சேம்பர் (K.H. Chamber) என்ற மகனும், இரு மகள்களும் இருந்தனர், இரண்டாவது மனைவி மூலம் ராய் எட்வின் (Roy Edwin) என்ற மகன் உள்ள நிலையில், மூன்றாவதாக ஐடா எல் சேம்பர் (Ida L Chamber) என்பவரை திருமணம் செய்து கொண்டார்

அதன்பிறகு 1930ஆம் ஆண்டு தனது சொத்துக்களை மூன்றாவது மனைவி ஐடா எல் சேம்பர் மற்றும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனான ராய் எட்வின் ஆகியோருக்கு உயில் எழுதிவைத்தார். அதை செயல்படுத்துவராக ஐடா எல் சேம்பர் உள்ளிட்ட மூவரை ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர் நியமித்தார். பின்னர் 1937ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த நிலையில், அவர் எழுதி வைத்த உயில்1938ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?

உயிலை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஐடா எல் சேம்பர் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து குரோம் லெதர் கம்பெனி (Chrome Leather Company) என்ற நிறுவனத்தை உருவாக்கி, சொத்துக்கள் அனைத்தையும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்ததால், அனைத்து சொத்துக்களும் கம்பெனிக்கு சொந்தமானது.

இந்நிலையில் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் சேம்பரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்து சொத்தில் முழு உரிமை உடைய ராய் எட்வின், தன் தந்தையின் மூன்றாவது மனைவி ஐடா எல். சேம்பருக்கு எதிராக வழக்கு தொடர்கிறார். ராய்க்கு எதிராக ஐடாவும் 1963ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 1965ஆம் ஆண்டு சமரசத்தின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை பிறப்பித்தது. அந்த தீர்ப்பின் படி ராய் எட்வின் மற்றும் அவரது குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலுத்தப்பட வேண்டும் எனவும், அதுதவிர ஒரு சொத்தும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. குரோம் லெதர் கம்பெனி ஐடாவுக்கு சேர வேண்டியது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் தோல் வியாபாரத்தில் சிறந்து விளங்கிய திரு. நாகப்ப செட்டியார் என்பவருடன் ஐடா ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டார். அதன்படி, 1965ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் தீர்ப்பில் ராய் எட்வினுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் 10 லட்ச ரூபாயையை வட்டியுடன் நாகப்பன் செட்டியார் செலுத்தும்படி ஒப்பந்தம் போடப்பட்டது.

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?

நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் செலுத்த வேண்டிய அனைத்து தொகையும் திரு. நாகப்ப செட்டியார் செலுத்திய பிறகு குரோம் லெதர் பேக்டரியின் சொத்துக்கள் நாகப்ப செட்டியாருக்கு சொந்தமாகிவிட்டது.

அதன் பின்னர் குரோம் லெதர் கம்பெனியின் சொத்துகளையும், தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள பங்குகளையும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியிடம் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார் திரு. நாகப்ப செட்டியார்.

கம்பெனி நஷ்டம் ஏற்பட்டதால் வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதன் காரணமாக, கடன் தொகையை வசூலிப்பதற்காக செங்கல்பட்டு சார்பு நீதிமன்றத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் கம்பெனிக்கு சொந்தமான 4 ஆயிரத்து 997 பங்குகளையும் மற்றும் ஆயிரத்து 800 முன்னுரிமை பங்குகளை விற்பதற்கும், அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை விற்பதற்கு வங்கிக்கு உரிமை அளித்து 1984ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?
ஆர்.வெங்கட்ராமன்

குரோம் லெதர் கம்பெனி நஷ்டத்தைச் சந்தித்ததால் அதை கலைக்க "தொழில் துறை மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியத்துக்கு" (BIFR) பரிந்துரைக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ((முன்னாள் குடியரசு தலைவர்)) திரு. ஆர்.வெங்கட்ராமன் கம்பெனி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் செயல்படும் வகையில், மறுசீரமைப்பு பணிகளை செய்ய சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் வங்கியும் குரோம் லெதர் கம்பெனியின் ஓய்வுபெற்ற வங்கித் துறை கூடுதல் செயலாளர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களை கம்பெனியின் சேர்மனாக நியமித்தது.

கம்பெனியின் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்த பிறகும் கம்பெனியை நடத்த இயலாத சூழ்நிலை நிலவியதால் 1989ஆம் ஆண்டு கம்பெனியை தொழில் துறை மற்றும் நிதி மறுசீரமைப் வாரியம் கம்பெனி மூடும் நிலை உள்ளதாக முடிவெடுத்து 1991 உத்தர பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அங்கு பணிபுரியும் ஊழியர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கலைப்புக்கு இடைக்காலத் தடையும் பெற்றது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 1993ஆம் ஆண்டு இந்து நாளிதழில் குரோம் லெதர் கம்பெனி மொத்த பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாகவும், தகுதியுள்ளவர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் எனவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கம்பெனியின் அசையும் சொத்துக்களான இயந்திரங்களையும் உள்ளடங்கி தான் பங்குகளை விற்பதாக அறிவிக்கப்பட்டத ஏலத்தில் பங்கு பெற்ற வி.கே.கே. சாரிட்டீஸ் ((VKK Charites)) மூலம் குரோம் லெதர் பிரைவேட் லிமிடெட்

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?

சொத்துக்கள் மற்றும் பங்குகளை ஏலத்தில் எடுக்கப்பட்டது. கம்பெனி மேம்பாட்டு பணிகளில் ஈடுபடும் பிரமோட்டர்ஸ் கம்பெனியை நடத்த விரும்பியது. தொழில்துறை நலவாரியமும் கம்பெனியை நடத்த அனுமதித்தது. ஊழியர் சங்கமும் வரவேற்று, அவர்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.

வி.கே.கே சாரிட்டீஸ்-ன் நாமினியாக (Nominee) திரு. ஜெகத்ரட்சகனை நியமிக்குமாறும், பங்குகளுக்கான தொகை 650 லட்ச ரூபாயை 1994ஆம் ஆண்டிலிருந்து வட்டியுடன் செலுத்துவார் என்றும், பின்பு அவர் பெயரில் மாற்றி கொடுக்குமாறும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவிடம் கடந்த 1995ஆம் ஆண்டு வி.கே.கே. சாரிட்டீஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை தொழில் துறை மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியம் ஒப்புக்கொண்டது.

பிறகு அதன் அடிப்படையில் 1995 ஆம் ஆண்டு தொகைகள் அனைத்தும் செலுத்தப்பட்ட பின் குரோம் லெதர் கம்பெனியின் 4 ஆயிரத்து 995 பங்குகள் ஜெகத்ரட்சகன் பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. அது உரிய முறையில் "நிறுவனங்களின் பதிவாளரிடம்" (Registrar of Companies) தாக்கல் செய்யப்பட்டது.

கம்பெனிகளை பொறுத்தவரை தங்கள் உரிமை மற்றும் செயல்பாடுகளை ரிஜிஸ்டர் கம்பெனிக்கு தெரியப்படுத் வேண்டும். அவ்வாறு பங்குகள் விற்பனை செய்யப்படும்போது இயக்குனர்களும், பங்குதாரர்களும் மாற்றம் செய்யப்படுமே தவிர கம்பெனி தொடர்ந்து அதன் தனித்தன்மையுடன் இயங்கும்.

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?

ஜெகத்ரட்சகன் குரோம் லெதர் கம்பெனி பிரைவேட் லிமிடெட் சேர்மனாக உரிய விதிகளின்படி நியமிக்கப்பட்டார். கம்பெனி விதிகள்படி, சொத்துக்கள் அனைத்தையும் குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமானதே தவிர சட்டத்தின்படி எந்த தனி நபருக்கும் தனித்து எக்காலத்திலும் பதியப்படவில்லை. கம்பெனி சட்டத்தின்படி இயக்குனர்கள் அல்லது தலைவர்கள் தனிப்பட்ட முறையில் உரிமை கோர இயலாது.திரு. ஜெகத்ரட்சகன் கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகி விட்டார்.

தற்போதுள்ள இயக்குனர்கள் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள். மேற்படி கம்பெனியின் அலுவல்களுக்கும் ஜெகத்ரட்சகனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இந்நிலையில் ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர் மகன் கே.ஹெச்.சேம்பரின் வாரிசு என்று ஜார்ஜ் ஜோசப் என்பவர் உரிமை கோரினார். கே.ஹெச்.சேம்பரின் இறப்பு சான்றிதழையும், வாரிசு சான்றிதழையும் போலியாக தயார் செய்த ஜார்ஜ் ஜோசப், குரோம் லெதர் கம்பெனி பிரைவேட் லிமிடெட் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாரிசுரிமை சான்றிதழ் ரத்து செய்தும், கே.ஹெச். சேம்பரின் வாரிசு தானா என்பது சந்தேகமாக உள்ளதாக குறிப்பிட்டு, கடந்த 2008ஆம் ஆண்டு ஜார்ஜ் ஜோசப் மனுவை தள்ளுபடி செய்தது.

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?

இந்நிலையில் ஜார்ஜ் ஜோசப் என்பவரின் பவர் ஏஜென்ட் என்று கூறிக்கொண்டு குவிண்டன் டாவ்சன் என்பவர போலியாக சான்றிதழ் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டு ஆவணங்களை தயார் செய்து பணம் பறிக்கும் நோக்கத்தில், கடந்த 2007 ஆண்டு சென்னை குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஜெகத்ரட்சகன் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் பின்னர் உரிய விசாரணை செய்யப்பட்டு ஜெகத்ரட்சகன் மீது கூறிய குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை அறிந்துகொண்டு காவல்துறை இறுதி அறிக்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் 2009 ஆண்டு நீதிமன்றத்தால் குவிண்டன் டாவ்சன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

குவிண்டன் டாவ்சன் மீண்டும் உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் ஒரு குற்ற வழக்கை பதிவு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டு தாக்கல் செய்தார் அதையும் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஜார்ஜ் ஜோசப் வாரிசு என்ற அடிப்படையில் சொத்துக்களின் உரிமை கோரவும் அல்லது எந்த வழக்கும் தாக்கல் செய்யவும் உரிமை இல்லை விபரத்தை பதிவு செய்தது.

ஏற்கனவே நீதிமன்றத்தால் முடிக்கப்பட்ட குற்ற வழக்குகள் மீண்டும் சட்டத்திற்கு புறம்பாக மறுவிசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். ஜெகத்ரட்சகன் கிரையம் பெற்ற பங்குகள் அனைத்தும் முறைப்படி ஏலத்தில் பெறப்பட்ட ஒன்றாகும். வழக்கின் நிலைமை இப்படி இருக்க ஒரு போலியான நபர் கொடுத்த புகாரின் பெயரில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெகத் ரட்சகன் மீதான வழக்கு - உண்மையான பின்னணி என்ன?

இந்நிலையில் அமலாக்கத்துறை பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து வழக்கிற்கு பண ப திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் நீதிபதி வேலுமணி அமர்வு அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

பின்னர் சிபிசிஐடி காவல்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது மனுதாரர் சார்பாக N. செந்தில் குமார் ஆஜராகி வாதிட்டார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் ஜெகத்ரட்சகன் மீது எந்த விசாரணை நடைமுறையும் மேற்கொள்ளக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடைமுறையும் மேற்கொள்ளக்கூடாது விசாரணையை வரும 27ம் தேதி அன்று ஒத்தி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories