அரசியல்

திருக்கல்யாண விழாவை நடத்த எதிர்ப்பா?- சு. வெங்கடேசன் எம்.பி., மீது திட்டமிட்டு அவதூறு பரப்பிய கும்பல்!

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போதும், சித்திரை திருவிழா நடத்த சு.வெங்கடேசன் எம்.பி., எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகள் வெளியாகி உள்ளன.

திருக்கல்யாண விழாவை நடத்த எதிர்ப்பா?- சு. வெங்கடேசன் எம்.பி.,  மீது திட்டமிட்டு அவதூறு பரப்பிய கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து வருவதால் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் வகையில் மத வழிபாட்டு கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் என எதுவும் நடக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதோடு, மே 4ம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை கோவில் இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவை ரத்து செய்தது போல, கோவிலுக்குள் நடைபெற இருந்த திருக்கல்யாணத்தையும் நடத்தக்கூடாது என மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாக சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை ஒரு கும்பல் பரப்பியதாக தெரிகிறது. இதனையறிந்த சு.வெங்கடேசன், மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது பெயர் மற்றும் புகைப்படத்துடன் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்வை ரத்து செய்யவேண்டும் என குறிப்பிட்டு Revathi Tnkm என்ற பயனர் வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அந்த அவதூறு பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று சம்பவம், கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போதும் நடைபெற்றிருக்கிறது. தேர்தல் சமயத்தில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு நடத்தப்படக் கூடாது என சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்ததாக, தற்போது நடந்த பாணியிலேயே சமூக வலைதளங்களில் அப்போது பொய்ச்செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், மக்களோ அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் சு.வெங்கடேசனுக்கு வாக்களித்து எம்.பி., ஆக்கியுள்ளனர்.

கொரோனாவால் இப்படியொரு இக்கட்டான சூழலை நாடு சந்தித்து வரும் வேளையில், இதுபோன்று வதந்திகள், பொய்ச் செய்திகளை சில விஷமிகள் பரப்பி வருவதற்கு கண்டங்கள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories