அரசியல்

“ஆதாரமற்ற தகவல்களைப் பேசினால் ‘நான்தான்பா ரஜினி’ எனச் சொல்லும் நிலைதான் வரும்” - ரஜினியின் பொய் தர்பார்!

ரஜினி திரையில் என்ன செய்தாலும் லாஜிக் பார்க்காமல் படமாக கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல இது. அரசியலை சற்று கவனத்தோடு அணுகவேண்டும்.

“ஆதாரமற்ற தகவல்களைப் பேசினால் ‘நான்தான்பா ரஜினி’ எனச் சொல்லும் நிலைதான் வரும்” - ரஜினியின் பொய் தர்பார்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

“துக்ளக் 50வது ஆண்டு விழா கூட்டத்தில் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. இதை நான் சொல்லவில்லை அவுட்லுக் கட்டுரையே சொல்கிறது” என்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இவரது இந்த பதிலையும், அவுட்லுக்கில் வந்த அந்தக் கட்டுரையையும் படித்தால் திருவிளையாடல் படம் தான் நினைவுக்கு வருகிறது. யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை தருமி வந்து படித்துவிட்டு செல்வதாகவே ரஜினி இந்த செய்தியாளர் சந்திப்பையும் அணுகியுள்ளார்.

2017ம் ஆண்டு அவுட்லுக் (OutLook) கட்டுரையை மேற்கோள் காட்டும் ரஜினிகாந்தும், இதனை அவருக்கு சொல்லிக் கொடுத்தவர்களும் இதனை முழுமையாக படிக்கவில்லை என்பதே உண்மை.

“ஆதாரமற்ற தகவல்களைப் பேசினால் ‘நான்தான்பா ரஜினி’ எனச் சொல்லும் நிலைதான் வரும்” - ரஜினியின் பொய் தர்பார்!

ரஜினி சொல்லும் அந்தக் கட்டுரையை எழுதி இருப்பவர் பத்திரிக்கையாளர் GC.சேகர். 20 நவம்பர் 2017 தேதியிட்ட அவுட்லுக் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. அந்த நேரத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதை மையப்படுத்தி அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பத்திரிகையாளர்கள் தங்களின் பத்திரிகையும், கட்டுரையாளர்களும் சந்தித்த நெருக்கடியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

1971ல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் அவமதிக்கப்பட்டதாக சோ ராமசாமி தனது துக்ளக் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டார் என்றும், அதனை அப்போதைய முதல்வர் கலைஞர் மறுத்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது எந்த இடத்திலும் ஆதாரமாக சொல்லப்படவில்லை.

அடிப்படை ஆதாரமற்ற ஒரு செய்தியை தகவலாகச் சொல்லி கடந்து போன கட்டுரையை படித்துவிட்டுத்தான் துக்ளக் விழாவில் பேசினேன் என்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையிலேயே ரஜினி ஆதாரத்தைக் காட்ட வேண்டுமென்று நினைத்திருந்தால் அவர் காட்டியிருக்க வேண்டியது அவுட்லுக் அல்ல... துக்ளக் இதழைத்தான்.

“ஆதாரமற்ற தகவல்களைப் பேசினால் ‘நான்தான்பா ரஜினி’ எனச் சொல்லும் நிலைதான் வரும்” - ரஜினியின் பொய் தர்பார்!

ரஜினி திரையில் என்ன செய்தாலும் லாஜிக் பார்க்காமல் படமாக கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல இது. அரசியலை சற்று கவனத்தோடு அணுகவேண்டும். தந்தை பெரியாரை பற்றிய கருத்தைக் கூறும்போது கொஞ்சம் கவனமாகப் பேசவேண்டும். அதனை மறுக்கும்போதாவது சரியாக ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் மேம்போக்காக கருத்து சொல்கிறார் ரஜினி.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்து 750 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அவருக்கு கொள்கை என்னவென்றால் தலை சுற்றுகிறது. யுத்தம் செய்யவில்லையென்றால் கோழை என்று சொல்லத்தான் அரசியல் அறிவிப்பை அறிவித்தார் ரஜினி. இப்போது அதனை ரஜினிக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

சொல்லும் விஷயத்தில் தெளிவும், உண்மையும் இருந்தால் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும். ஒரு விஷயத்தைத் தவறாகச் சொல்லிவிட்டு அதற்கு ஆதாரம் காட்டாமல் வேறு ஏதோ ஒரு செய்தியை ஆதாரமாக காட்டுவது எல்லாம் நம்பிக்கையை ஒருபோதும் பெற்றுத்தராது என்பதை ரஜினி உணரவேண்டும்.

“ஆதாரமற்ற தகவல்களைப் பேசினால் ‘நான்தான்பா ரஜினி’ எனச் சொல்லும் நிலைதான் வரும்” - ரஜினியின் பொய் தர்பார்!

ரஜினிக்கு இன்னொரு பத்திரிகை செய்தியும் நினைவிருக்கலாம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மக்கள் இறந்ததை விட்டுவிட்டு காவலர்களுக்கு ஆதரவு தந்தார்.

போராடினால் சுடுகாடுதான் என்று பேசிய ரஜினிகாந்த் ஆறுதல் சொல்ல தூத்துக்குடி சென்று மக்களை சந்தித்தபோது ''யார் நீங்க'' என்று மக்கள் கேட்டதும், “நான் தான்பா ரஜினிகாந்த்” என்றதும் கூட பத்திரிக்கை செய்திதான்.

உங்களை நன்கு அறிந்த மக்கள் அவர்கள் பக்கம் நீங்கள் இல்லை என்றால் யார் நீங்கள் என்றுதான் கேட்பார்கள். இது ஆறுதல் சொல்லப்போன இடத்துக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் ரஜினி.

banner

Related Stories

Related Stories