அரசியல்

மதத்தை வாக்கு வங்கியாக மாற்றுகிறது பா.ஜ.க - தி.மு.க எம்பி கனிமொழி சாடல்!

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கான உரிமை நிலை நாட்டப்படும் என தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதத்தை வாக்கு வங்கியாக மாற்றுகிறது பா.ஜ.க - தி.மு.க எம்பி கனிமொழி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க மகளிரணி சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா, கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “குடியுரிமை சட்டம் என்னும் பெயரில் மக்களை சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரித்தாளவேண்டும், வாக்கு வங்கியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படக் கூடிய மத்திய அரசு தற்போது நடைபெறுகிறது.

மதத்தை வாக்கு வங்கியாக மாற்றுகிறது பா.ஜ.க - தி.மு.க எம்பி கனிமொழி சாடல்!

மதம் அரசியல் என இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு அனைவராலும் கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகையாக விழாவாக இருக்கிறது என்றால் அது பொங்கல் மட்டுமே.” எனக் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், உள்ளாட்சி தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியை சுட்டிக்காட்டி 2020ம் ஆண்டிலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories