அரசியல்

“தமிழக தேர்தல் ஆணையம் குழப்பமான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

“தமிழக தேர்தல் ஆணையம் குழப்பமான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி , “எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க தொடுத்த வழக்கில் முழுமையாக எங்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே அதனடிப்படையில் நாங்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம்.

அதேபோல தமிழக தேர்தல் ஆணையம் குழப்பமான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மேலும் நிர்பயா, கால்நடை மருத்துவர் பிரியங்கா சம்பவங்களில் அரசு தலையீடு இல்லை; ஆனால் பொள்ளாச்சி சம்பவத்தில் அ.தி.மு.க.வின் நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டதால் போலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories