ரஜினி, கமல் ஆகியோரை நாகரீகமற்ற முறையில் விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அப்போது ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசிய அவர், “படத்தில் வேண்டுமானால் கமலும், ரஜினியும் ஹீரோக்களாக தெரியலாம். ஆனால், நிஜத்தில் அதற்கு சாத்தியமில்லை” எனப் பேசியுள்ளார்.
மேலும், “ இன்னும் இரண்டு படங்கள் நடித்து அவை தோல்வியடைந்தால் ரஜினி, கமல் மட்டுமல்ல; அவர்களை வைத்து படம் எடுத்தவர்களின் நிலையும் மோசமாகிவிடும். கட்சியே ஆரம்பிக்காத நடிகர் ரஜினி, பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனது திரைப்படத்திற்காக வாய்ஸ் கொடுத்து வருகிறார்.
வயதான காலத்தில் கமல், ரஜினி அரசியலில் இணைவது “காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது” என்பதற்கு உதாரணம் எனவும் விமர்சித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
அ.தி.மு.க அமைச்சரின் நாகரீகமற்ற விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செல்லூர் ராஜூவின் இந்த முறையற்ற கருத்துக்கு ரஜினி, கமல் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.