அரசியல்

காடுவெட்டி குருவின் உடலை எடுத்துச் செல்லக்கூட ராமதாஸ் உதவவில்லை.. இதுதான் அவரது உண்மை முகம்- ஜெகத்ரட்சகன்

விக்ரவாண்டியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசிய அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சமுதாய மக்களுக்கு என்ன செய்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

காடுவெட்டி குருவின் உடலை எடுத்துச் செல்லக்கூட ராமதாஸ் உதவவில்லை.. இதுதான் அவரது உண்மை முகம்- ஜெகத்ரட்சகன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தி விக்கிரவாண்டி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

‘காடுவெட்டி குரு’ மறைந்து அவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்துச்செல்ல அவர்கள் குடும்பத்துக்கு மூன்று லட்சம்...

Posted by Kalaignar Seithigal on Friday, October 18, 2019

தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அரக்கோணம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன், ''பாமகவை வளர்த்தெடுத்த ‘காடுவெட்டி குரு’ மறைந்து அவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்ல அவர்கள் குடும்பத்துக்கு மூன்று லட்சம் தேவைப்பட்டது. அதைக்கூட நான் தானே கொடுத்தேன்.

குருவின் குடும்பம் இன்று பிச்சை எடுக்கிறது. இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்கள் இன்று தத்தளிக்கின்றன. அவர்களுக்காக ஏதேனும் செய்திருக்கிறாரா மருத்துவர் ஐயா அவர்கள்.

வன்னியர் சமுதாயத்திற்காக மருத்துவர் ராமதாஸ் என்ன செய்துள்ளார். வன்னியர் மக்களுக்காக தலைவர் தான் கலைஞர் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories