தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு, மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பிற கட்சித் தலைவர்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
என்னிடம் நல்ல முறையில் பேசுபவர்களிடம், நானும் நன்றாகவே பேசுவேன். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ போல நடந்துகொள்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி மிக மோசமாக உள்ளது. அவர் கட்சியினர் 'ஜெ' வரி (ஜெகன் வரி) வசூலிக்கின்றனர்.
நான் பல முதல்வர்களை பார்த்துள்ளேன். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி போல ஒரு மோசமான முதல்வரை பார்த்தது இல்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். அரசு ஆணவப்போக்குடன் செயல்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் கட்சித் தலைவர்களை குறிவைத்து அரசு செயல்படுகிறது. இது நியாயமற்றது'' எனத் தெரிவித்தார்.