அரசியல்

“இந்தி திணிப்பு மூலம் பல்வேறு மாநிலங்களை ஒன்றிணைத்த அமித்ஷாவுக்கு நன்றி” : ஆசிரியர் கி.வீரமணி பேட்டி!

பெரியார் சிலைக்கு மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“இந்தி திணிப்பு மூலம் பல்வேறு மாநிலங்களை ஒன்றிணைத்த அமித்ஷாவுக்கு நன்றி” : ஆசிரியர் கி.வீரமணி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியாரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், பெரியார் பிறந்தநாளுக்கான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆசிரியர் கி.வீரமணி, “பெரியாரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கைகள் முன்பை விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது.

தொடர்ந்து பேசிய அவர், அமித்ஷாவுக்கு ஒருவகையில் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், தேர்தலுக்குப் பின்பு பிரிந்திருந்த பல்வேறு மாநிலங்களை மொழிப் பண்பாட்டில் கைவைத்து ஒன்றிணைத்திருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலிக்கின்றன” என்றார்.

இதனையடுத்து, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பியபோது, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை விட இது மிகமோசமான திட்டம் என்றும், குலக்கல்வி விவகாரத்தில் அண்ணா அவர்களின் வழியை மறந்து சமூக நீதிக்கு மாறாக அ.தி.மு.க வேறு பாதையில் செல்கிறது” என்றும் ஆசிரியர் கி.வீரமணி சாடியுள்ளார்.

மேலும், “அதிகப்படியான தேர்வுகள் மாணவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு 300 கோடி ரூபாய் செலவு செய்யும் அரசு, தமிழுக்கு வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது எனில் யார் இங்கு நன்றி மறந்தவர்கள்?” என பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கி.வீரமணி.

banner

Related Stories

Related Stories