அரசியல்

மோடி அரசின் முதல் 100 நாட்களில் வீழ்த்தப்பட்ட ஜனநாயகம் - ராகுல் காந்தி குற்றசாட்டு

100 நாட்களை கடந்த பிரதமர் மோடி அரசில் எந்த வளர்ச்சியும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் முதல் 100 நாட்களில்  வீழ்த்தப்பட்ட ஜனநாயகம் - ராகுல் காந்தி குற்றசாட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வெற்ரி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். மோடி பிரதமராக பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் 5% அளவுக்கு வீழ்ச்சியடைந்ததுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 100 நாட்களை கடந்த பிரதமர் மோடி அரசில் எந்த வளர்ச்சியும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''100 நாட்களை கடந்த மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள். ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை. விமர்சனத்தை தவிர்க்க ஊடகங்கள் மீதான கூடுதல் அடக்குமுறையும் நடைபெறுகிறது. பொருளாதாரத்தை மீட்க சரியான தலைமையும், திட்டமிடலும், பயணமும் தேவைப்படுகின்றன'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories