Politics

P Chidambaram: ப.சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! #LIVE

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on
6 September 2019, 09:16 AM

ப.சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பி.சி.சாக்கோ, முகுல் வாஸ்னிக், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுப்பு.

5 September 2019, 01:20 PM

-ப.சிதம்பரம் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

5 September 2019, 01:01 PM

-ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு ஏற்பு.

-ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு ஏற்பு.

இந்த மனு செப்டம்பர் 12ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹர் தெரிவித்துள்ளார்.

5 September 2019, 12:32 PM

-அமலாக்கத்துறையில் சரணடைய தயாராக இருக்கிறேன் என ப.சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல்.

5 September 2019, 12:16 PM

-ப.சிதம்பரத்துக்கு மருந்து, பாதுகாப்பு மற்றும் பாத்ரூம் வசதியுடன் கூடிய தனி சிறை வழங்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

5 September 2019, 12:08 PM

-ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

5 September 2019, 12:08 PM

-ப.சிதம்பரத்தை ஜாமினில் விடுவிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் மறுப்பு.

5 September 2019, 10:59 AM

- ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது.

5 September 2019, 10:59 AM

-நீதிமன்ற காவலுக்கு கபில் சிபல் எதிர்ப்பு

ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்ற சி.பி.ஐ வாதத்துக்கு கபில் சிபல் எதிர்ப்பு. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் வாதம். அமலாக்கத்துறையின் விசாரணை காவலுக்கு செல்லத் தயார் எனவும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கபில் சிபல் வாதம்.

5 September 2019, 10:59 AM

- சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ வாதம்

விசாரணை முடிந்து விட்டதால், ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ தரப்பு வாதம். நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டால், திகார் சிறைக்கு ப.சிதம்பரம் செல்ல நேரிடும்.

5 September 2019, 10:59 AM

- நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்ஆஜர்

சி.பி.ஐயின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

banner

Related Stories

Related Stories