அரசியல்

சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் பா.ஜ.க ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை; யெச்சூரி குற்றச்சாட்டு!

“சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் பா.ஜ.க ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் பா.ஜ.க ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை;  யெச்சூரி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாராக் கொள்கையால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதாரமும் படு மோசமான நிலையில் உள்ளது. இதனை தடுக்க எந்தவித நடவடிக்கை எடுக்காமல் முடிமறைக்கும் வேலையை மட்டுமே பா.ஜ.க அரசு மறைமுகமாக செய்து வருகிறது.

மேலும் நாட்டு மக்களிடையே பிரிவினை, மத மோதல்களை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா கும்பல் முயற்சித்து வருகிறது என தொடர்ந்து ஜனநாயக அமைப்புகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “சமூக நல்லிணக்கத்தை பா.ஜ.க அழித்து வருகிறது. மேலும் சமூகத்தின் மீது விஷத்தை தீவிரமாக பாய்ச்சி வருகிறது. இந்த நிலையால் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பில்லை. இதனால் பொருளாதாரத்திலும் வளர்ச்சி ஏற்படுவதும் சாத்தியமில்லாமல் போகிறது.

இந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அதன் விளைவாக வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தீர்க்க பா.ஜ.க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் பா.ஜ.க அரசு அதன் ஆர்.எஸ்.எஸ் பாசிச கொள்கைகளை குறுக்கு வழியில் செயல்படுத்த தீவிரம் காட்டுகிறது என அதில் அவர் குறிப்ப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories