மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் ரூ.305 கோடி மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டி ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதில் உத்தர பிரதேச கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எந்த தயக்கமும், அச்சமும் இன்றி மத்திய பா.ஜ.க அரசின் தோல்விகள் பற்றிய உண்மைகளை பேசியிருக்கிறார்.
அதனை ஏற்க முடியாமல் அவர் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்து வேட்டையாட நினைப்பது வெட்கக் கேடானது என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டிருந்த ட்வீட்டில், ப.சிதம்பரத்தின் மரியாதையை குலைப்பதற்காக முதுகெலும்பில்லாத சி.பி.ஐ, அமலாக்கத்துறை மற்றும் சில ஊடகங்களை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தனக்கு இருக்கும் அரசு அதிகாரத்தை இவ்வாறு இழிவாகவும், தவறாகவும் பயன்படுத்துவதற்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.