அரசியல்

“நாங்கள் ஆட்சியைக் கலைக்கமாட்டோம்; என்ன செய்கிறீர்கள் எனப் பார்க்கிறோம்” : குமாரசாமி பேச்சு!

“நீங்கள் சதி செய்து ஆட்சியை பிடித்துள்ளீர்கள். நாங்கள் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்யமாட்டோம். நீங்கள் எப்படி ஆட்சி நடத்தப்போகிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” : குமாரசாமி.

“நாங்கள் ஆட்சியைக் கலைக்கமாட்டோம்; என்ன செய்கிறீர்கள் எனப் பார்க்கிறோம்” : குமாரசாமி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. பின்னர், எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராகப் பதவியேற்றார். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று வெற்றி பெற்றது.

முன்னதாக, நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் விவாதத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியதாவது, “அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு எடியூரப்பா நன்றி தெரிவித்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும்.” என்றார்.

நான் 14 மாதங்கள் இந்த அரசை ஓட்டினேன். உங்களுக்கு (எடியூரப்பா) பதிலளிக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை. எனது மனசாட்சிக்குத் தான் நான் பதிலளிக்க வேண்டும். நான் என்ன வேலை செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.

நீங்கள் சதி செய்து ஆட்சியை பிடித்துள்ளீர்கள். நாங்கள் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்ய மாட்டோம். நீங்கள் எப்படி ஆட்சி நடத்தப்போகிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். நீங்கள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக விரோதமானது.” எனப் பேசினார் குமாரசாமி.

காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா பேசும்போது, “நீங்கள் நிலையான அரசாங்கத்தைக் கொடுப்பது முடியாத காரியம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் இந்த அரசாங்கம் அரசியலமைப்பற்றது மற்றும் ஒழுக்கக்கேடானது.” எனக் கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க அரசு பெரும்பான்மையை நிரூபித்ததையடுத்து, சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் இருக்கையில் இருந்து எழுந்த ரமேஷ் குமார், துணை சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு, சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

banner

Related Stories

Related Stories