கர்நாடக மாநிலத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை குறுக்கு வழியில் கவிழ்த்த பா.ஜ.க. தற்போது அங்கு ஆட்சி அமைக்க ஆயத்தமாக்கி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் சிறுதொழில் துறை அமைச்சராக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்தார்.
கடந்த ஜூன் மாதம் கே.பி.ஜே.பி. கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் ஆர்.சங்கர் இணைத்து விட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர் குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார். தீடிரென ஆதரவை விலக்கி கொண்டதால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஆர்.சங்கருக்கு எதிராக சபாநாயகரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூலை 25ம் தேதி கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, “சுயேட்சை எம்.எல்.ஏ ஆர்.சங்கர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் மகேஷ் கும்தஹள்ளி ஆகிய இருவரையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டார். இரண்டு எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யுமாறு பிப்ரவரி மாதம் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் என்னிடம் கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் இவர்கள் ராஜினாமா செய்வதாக என்னிடம் கடிதம் அளித்தனர். தகுதி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ராஜினாமா கடிதம் கொடுப்பதை ஏற்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.
சுயேட்சை எம்.எல்.ஏ சங்கர், ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் மகேஷ் குமதஹள்ளி ஆகிய மூன்று பேரையும் 2023ம் ஆண்டு மே 15ம் தேதி வரை சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதுதவிர மற்ற 12 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சட்டப்படி ஆய்வு செய்து விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும். என அவர் கூறினார்.
சபாநாயகரின் இந்த முடிவை முன்னாள் சித்தராமையா வரவேற்றுள்ளார். அதேநேரம், தற்போதைய அரசியல் சூழலில் யாராலும் ஆட்சியமைக்க முடியாது என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.