அரசியல்

நிலத்தகராறில் 9 பேர் சுட்டுக்கொலை : நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கைது !

உத்தர பிரதேசத்தின் நாராயண்பூரில் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலத்தகராறில் 9 பேர் சுட்டுக்கொலை : நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சபாஹி கிராமத் தலைவர் யக்யா தத்க்கும், மற்றொரு கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறில் முடிந்துள்ளது.

பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அண்டை மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ளது உ.பியின் சோன்பத்ரா பகுதி. அங்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு சொந்தமான நிலம் ஒன்று இருந்துள்ளது. அதில், விவசாய பணியை நடத்த கிராம மக்கள் அனுமதிக்காமல் பல ஆண்டுகளாக தடுத்து வந்ததால் கிராமத் தலைவர் யக்யா தத்துக்கு அந்த இடத்தை விற்றுவிட்டார்.

இதனையடுத்து, யக்தா தத் துப்பாக்கி ஏந்திய தனது ஆட்களுடன் நிலத்திற்கு வந்தபோது கிராம மக்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, யக்யா தத்தின் ஆதரவாளர்கள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் மூன்று பெண்கள் உட்பட 9 கிராம மக்கள் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து கிராமத் தலைவர் யக்யா தத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தப்பிச் சென்றனர். இதனையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சென்றிருந்தார். அப்போது அவரை பார்க்கவிடாமல் அம்மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் தடுத்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்ட்டத்தைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் நாராயண்பூரில் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏறபட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க 4 நபர்கள் மட்டுமே என்னுடன் வருவார்கள். அனுமதியுங்கள் என்கிறோம். ஆனால் அதற்கும் எங்களை அனுமதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறவேண்டும் இல்லையென்றால் நாங்கள் இங்கே தொடர்ந்து அமைதியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்". எனத் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினரைக் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

banner

Related Stories

Related Stories