நாட்டின் பொருளாதார வளர்ச்சி அசுரர் வேகத்தில் வளர்கிறது என பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் கூறிவந்தாலும் வளர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் குறைந்துவருவதாக சமீபத்தில் வந்த ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பா.ஜ.க ஆட்சியில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதல் அதிகரித்து விட்டது. எதிர்க்கருத்துக்களை முன்வைப்பவர்களின் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.
சகிப்பின்மையின் வெளிப்பாடே இதுபோன்ற தாக்குதலுக்கு காரணம் என அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்பினர் கூறிவந்த நிலையில் தற்போது தொழிலதிபர்களும், முதலீட்டார்களும் அதே கருத்தே முன்வைத்ததுள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக ஆதி கோத்ரேஜ் பேசியுள்ளார். இந்த நிழ்ச்சியில் முதலீட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
அந்த கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது, “புதிய இந்தியாவை உருவாக்குதல் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவது என பிரதமர் மோடி கூறுகிறார். அதற்கு வேண்டுமானாலும் அவரை வாழ்த்துகிறேன். அதேநேரத்தில் பா.ஜ.க ஆட்சியில் நாட்டில் நடக்கும் சம்பவமும் எதுவும் நல்லவையாக இல்லை.
தற்போது நாட்டில் நிலவும் பெரிய அளவிலான வறுமை, அதிகரிக்கும் சகிப்பின்மை, உறுதியற்ற சமூகச்சூழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கலாச்சாராக் காவலர்கள் என்ற பெயரில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை, சாதி மற்றும் மதம் சார்ந்த வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவிட்டன.
மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை. இந்த வேலை வாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் மிக அதிகம். எனவே, இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும்.
மேலும், தண்ணீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் அதிகளவிலான பிளாஸ்டிக் பயன்பாடு, பற்றாக்குறையான மருத்துவ வசதிகள், குறைந்த அளவிலேயே சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்படுவது போன்ற சிக்கல்களுக்கும் தீர்வுகாண வேண்டும்.
இதற்கு தீர்வு காண்பதற்கு எந்த திட்டமும் இந்த ஆட்சியர்களிடம் இல்லை என்றே தெரிகிறது. தீர்வுக்கு திட்டம் வகுத்து அதை செயல்படுத்தினால் மட்டுமே ஆரோக்கியமான சூழலில் மக்கள் வாழ்க்கை நடத்த முடியும். அதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதி கோத்ரேஜ் இந்த கருத்துக்கு முதலீட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள், தொழிலதிபர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.