அரசியல்

பலித்ததா பா.ஜ.க.,வின் அழுகுணி அரசியல் : குமாரசாமியின் முதல்வர் பதவி பறிபோகிறதா ?

கர்நாடகாவில் காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி ஆட்சி கலைவதை உறுதிபடுத்தும் வகையில் மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலித்ததா பா.ஜ.க.,வின் அழுகுணி அரசியல் : குமாரசாமியின் முதல்வர் பதவி பறிபோகிறதா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தனக்கது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் அளித்து வருகின்றனர்.

அதனால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. அதேசமயத்தில் பாஜகவின் பலம் கூடிவருவதால் அந்த மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சநிலையில் உள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் கூட்டணியை முடக்குவதற்காக 1000 கோடி கொடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களை வாங்க எடியூரப்பா குதிரை பேரம் செய்து வருவதாகவும் நேற்று செய்தி வெளியான நிலையில் இன்று பெங்களூருவில் ஹொசகோட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ நாகராஜ் மற்றும், சிக்பள்ளாப்புரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதாகர் ஆகிய இருவரும், இன்று அடுத்தடுத்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.

முன்னதாக மும்பையில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்ய சென்ற கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாரை போலீசாரை கைது செய்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை அனைத்தையும் உற்று நோக்கும்போது, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார் என்றும், காங்கிரஸ்-மஜத கூட்டணியின் பலம் சரிந்து கர்நாடகாவில் பாஜகவின் பலம் கூடி ஆட்சி கவிழ்வது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது என்றும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories