அரசியல்

”காங்., எம்.பிக்கள் மேட்ச் பார்க்க விரும்பியதால் சபை ஒத்திவைக்கப்பட்டது”- பா.ஜ.க எம்.பி

காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களின் அவை நடவடிக்கையை கேலி செய்து ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க எம்.பி

”காங்., எம்.பிக்கள் மேட்ச் பார்க்க விரும்பியதால் சபை ஒத்திவைக்கப்பட்டது”- பா.ஜ.க எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா -நியூஸி.,போட்டிக்காக அவை ஒத்திவைப்பு”-காங்கிரஸ் எம்.பிக்களை வம்பிழுத்த பா.ஜ.க எம்.பி

இன்றைய மாநிலங்களவை கூடிய போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் அவை தலைவர் வெங்கையா நாயுடுவின் இருக்கைக்கு அருகே சென்று கோஷங்கள் எழுப்பினர்.

அதேபோல், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், ம.ஜ.தா கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் குழப்பம் ஏற்படுத்தி வரும் பா.ஜ.கவின் செயலுக்கு, மத்திய பா.ஜ.க அரசு ஒத்துழைப்பு நல்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கமிட்டனர்.

”காங்., எம்.பிக்கள் மேட்ச் பார்க்க விரும்பியதால் சபை ஒத்திவைக்கப்பட்டது”- பா.ஜ.க எம்.பி

இரு கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர். இடைவேளைக்கு பிறகு அவை கூடிய போதும் காங்கிரஸ், திரிணாமுல் எம்.பிக்களின் அமளி நீடித்ததால் அவையை நாள் முழுக்க ஒத்திவைத்தார் சபாநாயகர் வெங்கையா நாயுடு.

இதனையடுத்து, பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வப்பன் தாஸ்குப்தா ட்விட்டரில் சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். அதில், “ இந்தியா-நியூசிலாந்து இடையேயான உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி இன்று நடைபெறுவதால், காங்கிரசும், திரிணாமுல் உறுப்பினர்களும் வேண்டுமென்றே மாநிலங்களவை நடவடிக்கையை சீர்குலைத்து ஒத்திவைக்கச் செய்துள்ளனர்” என ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்திருக்கக் கூடும் என மக்களவையில் நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருப்பதும், இன்று மாநிலங்களவை நடவடிக்கை குறித்து பா.ஜ.க எம்.பி ட்வீட் செய்திருப்பதும் காங்கிரஸாரை மட்டம் தட்டுவதற்காக கர்நாடக அரசியலை பயன்படுத்திக் கொள்வது தெள்ளத்தெளிவாக தெரிய வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories