அரசியல்

அதிருப்தியாளர்களை கட்டுப்படுத்த புதிய வியூகத்தை கையிலெடுத்த காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி !

கர்நாடகா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

அதிருப்தியாளர்களை கட்டுப்படுத்த புதிய வியூகத்தை கையிலெடுத்த காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதில் 11 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதனால், காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து அதிகரித்தது.

இந்நிலையில், அமைச்சர் நாகேஷ் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அவர் ஆளுநரிடம் கடிதம் அளித்தார். இதுவரை எம்.எல்.ஏ.க்கள்தான் ராஜினாமா செய்து வந்த நிலையில் ஓர் அமைச்சர் பதவி விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சை எம்எல்ஏ வான நாகேஷுக்கு, குமாரசாமி அரசில் கடந்த மாதம்தான் அமைச்சர் பதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தியாளர்களை கட்டுப்படுத்த புதிய வியூகத்தை கையிலெடுத்த காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி !

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கூட்டம் பெங்களூர் சதாசிவம் நகரில் உள்ள துணை முதல்வர் பரமேஸ்வர் (காங்கிரஸ்), இல்லத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். மொத்தம் 21 அமைச்சர்களும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று மதியம் அறிவித்தார்.

இதன் மூலம், புதிதாக அமைச்சரவையை உருவாக்கலாம், அதில், அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுக்கலாம், இதன் மூலம் அவர்கள் ஆதரவை மீண்டும் பெற்று ஆட்சியை தக்க வைக்கலாம் என்பது தான் காங்கிரஸின் திட்டமாக உள்ளது. இதனையடுத்து, மாலையில் மதசார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 9 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

விரைவில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்றும் முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் அறிவித்தது.

காங்கிரஸ் கட்சியை வளர்க்க தமிழக முன்னாள் முதல்வர், காமராஜர் அமைச்சரவை ராஜினாமா செய்ததை போல, ஆட்சியை காப்பாற்ற, கர்நாடக காங்கிரஸ் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories