அரசியல்

அப்போ யாகம்... இப்போ இணைப்பு நிகழ்வு... தலைமைச் செயலகம் என்ன அ.தி.மு.க அலுவலகமா?

தலைமைச் செயலகத்தை தங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் போலவே நடத்திக்கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.கவினர்.

அப்போ யாகம்... இப்போ இணைப்பு நிகழ்வு... தலைமைச் செயலகம் என்ன அ.தி.மு.க அலுவலகமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தலைமைச் செயலகத்தை தங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் போலவே நடத்திக்கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

டி.டி.வி ஆதரவாளராக இருந்த விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் எடப்பாடி பழனிசாமியை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதேபோல, கடந்த திங்கட்கிழமையன்று அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதியும் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

மாண்பு மிகுந்த தலைமைச் செயலகத்தில் இது போன்ற தனிப்பட்ட கட்சி நிகழ்வுகள் நடக்கலாமா எனவும், தலைமைச் செயலகத்தில் இணைப்பு நிகழ்வு என்றால் அ.தி.மு.க கட்சி அலுவலகம் எதற்கு இருக்கிறது எனவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்படுபவர்கள் அ.தி.மு.க அலுவலகத்திற்குச் செல்லும் தகவல் தங்களுக்கு சிக்கல்களை உருவாக்கும் எனக் கருதியோ என்னவோ, சட்டப்பேரவைக்கு வரும் சாக்கில் அங்கேயே எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் அதிகாலையில் யாகம் நடத்தப்பட்டது. எடப்பாடியிடமிருந்து முதல்வர் பதவியைக் கைப்பற்றுவதற்காக இந்த யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

யாகம் நடத்தியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி கிடைக்காத நிலையில், இருவருக்கும் இடையே முட்டல் மோதல் அதிகரித்தது அனைவரும் அறிந்ததே.

யாகம் நடத்துவது, கட்சி இணைப்பு நிகழ்வுகளை நடத்துவது என தலைமைச் செயலகத்தை தங்கள் விருப்பம்போல பயன்படுத்துவதற்கு பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories