அரசியல்

சினிமாவை போல தொகுதிப் பணிகளை கவனிக்கவும் ‘டூப்’ நியமித்த சன்னி தியோல்!

மக்களவை எம்.பி சன்னி தியோல் அவருடைய தொகுதியை கவனிப்பதற்கு அவருக்குப் பதிலாக ஒருவரை நியமித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவை போல தொகுதிப் பணிகளை கவனிக்கவும் ‘டூப்’ நியமித்த சன்னி தியோல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நடிகர் சன்னி தியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சினிமா துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர். இவர் அவர் தொகுதியில் உள்ள கூட்டங்களில் பங்கேற்பதற்கு தனக்குப் பதிலாக எழுத்தாளர் குர்பீத் சிங் பல்கேரி என்பவரை நியமனம் செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் “பஞ்சாப் மாநிலம் மொஹாலி, பால்ஹேரி கிராமத்தில் வசிக்கும் சுபிந்தர் சிங்கின் மகன் குர்பிரீத் சிங் பால்ஹேரியை எனது பிரதிநிதியாக நியமிக்கிறேன், எனது நாடாளுமன்றத் தொகுதியான குர்தாஸ்பூர் தொடர்பான முக்கிய விஷயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், ஆலோசிக்க இவரை எனது பிரதிநிதியாக நியமிக்கிறேன்” என தியோல் கையெழுத்திட்ட கடிதம் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரிசெய்யவே மக்களின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இவரோ அவரின் தொகுதிக்குட்பட்ட பணிகளை கவனிக்க இவருக்கு பதில் மற்றொரு பிரதிநிதியை நியமித்து இருப்பது வேடிக்கையானது. இவரது பிரதிநிதி எம்.பி செய்யவேண்டிய பணியை கவனித்தால் இவர் என்ன வேலை செய்வார் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

சினிமாவில் சில சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாவிட்டால் அவரைப் போன்ற உடலமைப்பு கொண்ட வேறு ஒருவரை ‘டூப்’ ஆக பயன்படுத்துவார்கள். தற்போது அதேபோன்று சன்னி தியோல் எம்.பி., அவருக்குப் பதிலாக பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளார் என சமூக வலைதளத்தில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories