அரசியல்

"நாங்கள் திராவிட பழங்குடிகள்" மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அதிரடி பேச்சு!

நாங்கள் திராவிடர் பழங்குடிகளான ‘பங்கா’ வழித்தோன்றல்கள், என மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் பேசியுள்ளார்.

"நாங்கள் திராவிட பழங்குடிகள்" மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அதிரடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாங்கள் திராவிடர் பழங்குடிகளான ‘பங்கா’ வழித்தோன்றல்கள், எனவே எங்கள் மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது,"இந்தியா முழுவதும் நாகர் இனம்தான் வாழ்ந்தனர். அவர்கள் பேசிய மொழி தமிழ். இதை அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். அம்பேத்கரின் இந்த கருத்துகளை ஏற்பதாக மேற்குவங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவும் கூறியிருக்கிறார்.

கி.மு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர் பழங்குடிகளான பங்கா இனத்தினர் மேற்கு வங்கத்தில் குடியேறினர். அதனால் தான் பங்கா இன மக்கள் வாழும் எங்கள் மாநிலத்தை ‘பங்களா’ என பெயர் மாற்றம் செய்ய கோருகிறோம். நாங்களும் திராவிடர் பழங்குடிகள் என்று அறிவித்தார்.

இதற்காக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் தராமல் இருக்கிறது. எங்கள் மாநிலத்தின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும். என அவர் பேசியுள்ளார்

banner

Related Stories

Related Stories