உத்திரப் பிரதேசத்தின் (கிழக்கு) காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. இவர், நடந்து முடிந்த தேர்தலின் போது காங்கிரஸின் வெற்றிக்காக ரோட்ஷோ, பேரணி என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தற்போது, உ.பி. அரசு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி பகிரங்கமாக சாடியுள்ளார்.
அதில், உத்தரபிரதேச மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக மாநிலத்தில் நடமாடுகின்றனர். அவர்களுக்கு தோன்றுவதையெல்லாம் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் ஆட்சி புரியும் யோகி ஆதித்யநாத்தின் பா.ஜ.க. அரசு இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் உள்ளது. அதேப்போல், இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் அரசின் காதுகேளாத செவிகளில் விழவில்லை. கிரிமினல் குற்றவாளிகளின் காலில் பா.ஜ.க அரசு சரணைந்துவிட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.