பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு மத்தியமைச்சர் பதவி கிடைக்கும் என்ற செய்தி உலாவந்த நிலையில், குஜராத் பா.ஜ.க தலைவரான ஜுது வாக்கானி தனது ட்விட்டர் பதிவில் அமித் ஷாவை சந்தித்து அவரது புதிய நியமனம் குறித்து வாழ்த்தியதாக கூறியுள்ளார்.
அந்த பதிவில் "பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒரு வலுவான கூட்டாளியாக எங்கள் வழிகாட்டியான அமித் ஷா இருப்பர். அவருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உடல் நலனை கருத்தில் கொண்டு அருண் ஜெட்லி பிரதமர் மந்திரி பதவியில் இருக்க விரும்பவில்லை என்று விலகியுள்ளார். மத்திய அமைச்சரவையில் அமித் ஷா இடம்பெறுகிறார் என்பது உறுதியானதால், அவருக்கு நிதியமைச்சர் இலாக்கா வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அருண் ஜெட்லிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு சில நாட்கள் பியுஷ் கோயல் நிதியமைச்சர் பதவியை நிர்வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் அவரும் நிதியமைச்சர் பதவிக்கான ஒரு தேர்வாக இருப்பார்.
அமித்ஷா அமைச்சரானால் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பதவிக்கு ஜே.பி. நட்டா நியமிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.