அரசியல்

“மக்களின் நம்பிக்கையை இழந்த எடப்பாடி பதவிவிலக வேண்டும்” : தயாநிதி மாறன்

அ.தி.மு.க மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லாததால் ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சியை ஓரங்கட்டிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார் தி.மு.க எம்.பி., தயாநிதி மாறன்.

File image
File image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க எம்.பி., தயாநிதி மாறன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“மக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் மக்களவையில் எதிரொலிக்கும். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.

தமிழக மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்காமல், தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்தோடு செயல்படுகிறார்.

அ.தி.மு.க மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லாததால் ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சியை ஓரங்கட்டிவிட்டனர். மக்களின் நம்பிக்கையை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவிவிலக வேண்டும்.

தமிழக மக்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்கள். அதுதான் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் தயாநிதி மாறன் எம்.பி.

banner

Related Stories

Related Stories