மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் பாஜ.க 2வது இடத்தை பெற்றது.
திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களும், பா.ஜ.க 18 இடங்களும் பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனையடுத்து இன்று மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தேர்தல் விதிமீறல் குறித்த புகாரை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை என்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசை மத்திய பா.ஜ.க அரசு செயல்படவிடவில்லை, தேர்தல் நேரத்தில் வன்முறைகளில் ஈடுபட்டது என மம்தா புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த தோல்விக்கு பொறுப்பெற்று நான் வாகிக்கும் முதல்வர் பதவிலிருந்து விலகுவதாக திரிணாமுல் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறினார். ஆனால் நிர்வாகிகள் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.