Politics

#LIVE UPDATES | தேர்தல் 2019 : தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி !

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இந்தியா முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

#LIVE UPDATES | தேர்தல் 2019 : தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on
23 May 2019, 05:09 PM

சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் முன்னிலை!

23 May 2019, 04:54 PM

- ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் டி.ஆர்.பாலு வெற்றி!

23 May 2019, 04:31 PM

- சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் வெற்றி!

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 3,26,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

23 May 2019, 03:45 PM

- காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் செல்வத்திற்கு வெற்றி சான்றிதழை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.

23 May 2019, 03:44 PM

- தமிழகத்தில் துடைத்தெறியப்பட்ட பா.ஜ.க!

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி; தமிழகத்தில் துடைத்தெறியப்பட்ட பா.ஜ.க!

23 May 2019, 03:43 PM

- கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

23 May 2019, 03:34 PM

- ஓசூரில் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றி!

ஓசூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சத்யா 23,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

23 May 2019, 03:28 PM

- ஆம்பூரில் தி.மு.க வெற்றி!

ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வில்வநாதன் 36,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

23 May 2019, 03:25 PM

- அரக்கோணம்: திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெற்றி!

23 May 2019, 02:50 PM

- முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வி!

கர்நாடகாவின் தும்கூர் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடா 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

23 May 2019, 02:46 PM

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி!

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 5 லட்சத்து 8 ஆயிரத்து 725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வாக்கு வித்தியாசம்: 93 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

23 May 2019, 02:37 PM

- 15,000 வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலை!

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான 17வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரைவிட 15,623 வாக்குகள் வித்தியாசத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 02:37 PM

- தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார்!

23 May 2019, 02:16 PM

- பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க முன்னிலை!

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான 10வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 30,594 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

23 May 2019, 02:13 PM

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வெற்றி!

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை 37,901 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளார் செந்தில்பாலாஜி தோற்கடித்தார்.

23 May 2019, 02:07 PM

- கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு நன்றி! - தொண்டர்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

23 May 2019, 01:49 PM

- மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 4,47,150 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றுள்ளார்.

23 May 2019, 01:46 PM

- தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி நிலவரம்!

23 May 2019, 12:48 PM

- மாம்பழத்தை நசுக்கி எறிந்த திமுகவினர்!

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வாயில் முன்பு திமுக தொண்டர்கள் மாம்பழத்தை நசுக்கி தூக்கியெறிந்தனர்.

23 May 2019, 12:48 PM

- சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 2,570 வாக்குகள் வித்தியாசத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 11:16 AM

- தஞ்சையில் தி.மு.க வெற்றி!

தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் நீலமேகம் 31,227 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

23 May 2019, 11:14 AM

- தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் 1577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

23 May 2019, 11:12 AM

- காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் அமோக வெற்றி!

வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங். தலைவர் ராகுல் காந்தி 8,38,371 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

23 May 2019, 11:10 AM

- நீலகிரி (தனி) தொகுதியில் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

23 May 2019, 10:43 AM

- பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு இயந்திரம் பழுதானது!

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 13வது வாக்கு எண்ணிக்கையின் போது 8வது மேஜையில் உள்ள பழுதான வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் மட்டும் இறுதியில் எண்ணப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

23 May 2019, 10:38 AM

- தருமபுரியில் அன்புமணிக்கு பின்னடைவு!

தருமபுரி மக்களவைத் தொகுதியில் 40,274 வாக்குகள் வித்தியாசத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.

23 May 2019, 09:51 AM

- குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றி!

குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் 29,198 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

23 May 2019, 09:30 AM

வயநாட்டில் 5.83 லட்சம் வாக்குகள் பெற்று ராகுல்காந்தி முன்னிலை!

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 331 வாக்குகள் பெற்று வெற்றிமுகம் காண்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

23 May 2019, 09:30 AM

- 38 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை!

23 May 2019, 09:12 AM

- மத்திய சென்னை: 7வது சுற்று முடிவில் 1.37 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறன்!

7வது சுற்று முடிவுகள்:

தி.மு.க - 2,02,074

பா.ம.க - 64,236

ம.நீ.ம - 41725

நாம் தமிழர் - 13604

அ.ம.மு.க - 10901

1,37,838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி காண்கிறார் மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன்

23 May 2019, 09:09 AM

- சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: ஆம்பூரில் தி.மு.கவுக்கு முதல் வெற்றி!

23 May 2019, 09:05 AM

1.81 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஆ.ராசா முன்னிலை!

நீலகிரி (தனி) தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 1,81,703 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

23 May 2019, 09:02 AM

- தருமபுரியில் தி.மு.க வேட்பாளர் செந்தில்குமார் முன்னிலை!

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு பின்னடைவு.

23 May 2019, 09:00 AM

- திருச்சி மக்களவைத் தொகுதி: 11வது சுற்று முடிவு!

திருச்சி: 11வது சுற்று முடிவுகள்

காங்கிரஸ் - 3,33,983

தே.மு.தி.க - 91,379

அ.ம.மு.க - 53,361

ம. நீ. ம - 27,130

2,42,604 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 08:58 AM

- சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை!

23 May 2019, 08:06 AM

- 16 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க முன்னிலை!

23 May 2019, 07:42 AM

- சதி வேளையில் ஈடுபட அ.தி.மு.கவினர் திட்டம்: தேர்தல் ஆணையரிடம் தி.மு.க புகார்!

தி.மு.க. 37 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 17 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆனால், சூலூர், பெரம்பூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து செய்தியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

பெரம்பூர் தொகுதியில் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ள நிலையில், இதனை தடுக்கும் விதத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க அ.தி.மு.க சதி திட்டம் தீட்டுகிறது என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

23 May 2019, 07:32 AM

- 13 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை

23 May 2019, 07:26 AM

- மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் வேட்பாளர் நன்றி!

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இது குறித்து பேசிய அவர், அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

புதுச்சேரிக்கான நிதி ஆதாரத்தை பெற்றுத் தருவதே முதற்பணி என பேசியுள்ளார் வைத்திலிங்கம்.

23 May 2019, 07:21 AM

- #LIVE | தமிழகத்தை கைப்பற்றிய தி.மு.க - முன்னிலை நிலவரம்!

23 May 2019, 07:18 AM

- வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றம் ஏன்?

23 May 2019, 07:06 AM

- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: 6வது சுற்றில் திமுக முன்னிலை!

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 2,644 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் சரவணன் முன்னிலை வகிக்கிறார்.

23 May 2019, 06:56 AM

- தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை!

அ.தி.மு.கவை விட 35,433 வாக்குகள் அதிகம் பெற்று தென் சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழகச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.

23 May 2019, 06:56 AM

- கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: 5வது சுற்றில் காங்கிரஸ் முன்னிலை!

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 19,224 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 06:51 AM

- தென் சென்னை வாக்கு இயந்திரத்தில் கோளாறு!

தென் சென்னைக்கான வாக்கு எண்ணும் மையத்தில், சோழிங்கநல்லூர் தொகுதிகான வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் விவிபேட் வாக்குகளை கொண்டு எண்ணப்படுகிறது.

23 May 2019, 06:47 AM

- தருமபுரியில் அன்புமணி ராமதாஸுக்கு பின்னடைவு!

23 May 2019, 06:44 AM

- காஞ்சிபுரம் தொகுதியிலும் தி.மு.க முன்னிலை!

78,683 வாக்குகள் அதிகம் பெற்று காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செல்வம் முன்னணியில் உள்ளார்.

23 May 2019, 06:32 AM

மத்திய சென்னையில் தொடர்ந்து தயாநிதி மாறன் முன்னிலை!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 65,373 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவின் தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 06:29 AM

- கள்ளக்குறிச்சியில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை!

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 1,03,323 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. முன்னிலை.

தே.மு.தி.கவின் சுதீஷுக்கு பெரும் பின்னடைவு.

23 May 2019, 06:17 AM

- ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.கவின் டி.ஆர்.பாலு முன்னிலை!

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 40,842 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

23 May 2019, 05:43 AM

- தென்சென்னை தி.மு.க வேட்பாளர் 2வது சுற்றில் முன்னிலை!

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 26000 வாக்குகள் பெற்று முன்னிலை.

23 May 2019, 05:39 AM

- 4ம் சுற்று முடிவில் தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலை!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி 4ம் சுற்று முடிவில் 41,637 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 05:32 AM

- திருச்சியில் காங்கிரஸ் முன்னிலை!

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 89,311 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார்.

23 May 2019, 05:30 AM

- வயநாட்டில் ராகுல் தொடர்ந்து முன்னிலை!

கேரளாவின் வயநாடு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்.

23 May 2019, 05:27 AM

- தி.மு.க வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம்!

தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கு தலைவர் மு.க.ஸ்டாலினின் வியூகம்தான் காரணம் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

23 May 2019, 05:05 AM

- மதுரையில் வாக்கு எண்ணிக்கை திடீரென நிறுத்தம்!

23 May 2019, 05:04 AM

- 4 வது சுற்று முடிவு: தொடர் முன்னிலையில் தி.மு.க!

நெல்லையில் மக்களவைத் தொகுதியில் 4வது சுற்று முடிவில் 21,277 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை

23 May 2019, 04:56 AM

- சிதம்பரம் (தனி) தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலை!

23 May 2019, 04:53 AM

- மக்களவைத் தேர்தல் முடிவுகள்: திமுக முன்னிலை!

தமிழகத்தில் உள்ள 37 மக்களவைத் தொகுதிகளில் திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலையில் உள்ளது.

23 May 2019, 04:37 AM

- தி.மு.க வெற்றி எதிரொலி: தொண்டர்கள் கொண்டாட்டம்!

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

23 May 2019, 04:34 AM

- மதுரையில் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை!

23 May 2019, 04:29 AM

- புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை!

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 33,433 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் உள்ளார்

23 May 2019, 04:29 AM

- அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுகவின் ஜெகத்ரட்சகன் முன்னிலை!

23 May 2019, 04:20 AM

- மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

23 May 2019, 04:19 AM

- 13 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை!

23 May 2019, 04:17 AM

- கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை!

கேரள மாநிலத்தில் 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை. திருவனந்தபுரத்தில் சசி தரூரும், வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னிலையில் உள்ளனர்.

23 May 2019, 03:54 AM

- கன்னியாகுமரியில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை

23 May 2019, 03:48 AM

- தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

23 May 2019, 03:45 AM

- நெல்லையில் தி.மு.க. முன்னிலை!

நெல்லை மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று முடிவில் தி.மு.க. 5,084 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது

23 May 2019, 03:40 AM

- மத்திய சென்னையில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை!

23 May 2019, 03:37 AM

- மக்களவைத் தேர்தல் முடிவுகள்:காலை 9 மணிநிலவரம்!

23 May 2019, 03:36 AM

- சிவகங்கையில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை; எச்.ராஜாவுக்கு பின்னடைவு!

23 May 2019, 03:34 AM

- தே.மு.தி.க. சுதீஷ் பின்னடைவு!

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு.

23 May 2019, 03:33 AM

- புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகிக்கிறார்.

23 May 2019, 03:31 AM

- காரைக்குடியில் வாக்கு இயந்திரம் உடைப்பு!

காரைக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு

23 May 2019, 03:28 AM

- வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.கவினர் அராஜகம்!

ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் அ.தி.மு.க முகவர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அதிமுகவினருக்கும் செய்யாறு உதவி தேர்தல் அதிகாரிக்கும் இடையே சுமார் 20 நிமிடம் வாக்குவாதம்.

23 May 2019, 03:25 AM

- தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை. பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசைக்கு பின்னடைவு!

23 May 2019, 03:20 AM

- மக்களவைத் தேர்தல்: 16 தொகுதிகளில் திமுக முன்னிலை

16 மக்களவைத் தொகுதிகளில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

23 May 2019, 03:13 AM

- ரேபரேலியில் சோனியா முன்னிலை

உத்தர பிரதேச மாநில ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 03:11 AM

- திருப்பூர் மற்றும் மதுரை மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை

23 May 2019, 03:05 AM

- நீலகிரி (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 03:04 AM

- நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராசு 2,641 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

23 May 2019, 03:01 AM

- பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் திராவின முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்

23 May 2019, 02:58 AM

- சேலம் மாவட்டத்தில் தபால் வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சி ஏஜென்ட்களுக்கு போதிய இடம் ஒதுக்கப்படாததால் தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்

23 May 2019, 02:43 AM

- இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

- நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கையில் தூத்துக்குடி, நாமக்கல், நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலையில் உள்ளது

- தென்சென்னை மக்களவைத் தொகுதி தபால் வாக்குகள் எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய தபால் வாக்கு எண்ணிக்கை தற்போது வரை தொடங்கவில்லை.

ஆனால், 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

banner

Related Stories

Related Stories