அரசியல்

ஓ.பி.எஸ்-ன் கோரிக்கையை ஏற்றே தேனியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது-இளங்கோவன் குற்றசாட்டு!

ஓபிஎஸ் மோடியிடம் தனது மகனை எப்படியாவது டெபாசிட் தொகையாவது வாங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.அதன் அடிப்படையிலேயே இங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓ.பி.எஸ்-ன் கோரிக்கையை ஏற்றே தேனியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது-இளங்கோவன் குற்றசாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற்றது. ஒருசில காரணங்களை காட்டி தேனீ உள்ளிட்ட 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனடிப்படியில் இன்று 7ம் கட்ட தேர்தலுடன் 13 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ;-

தேனி மக்களவை தொகுதிக்கான தேர்தல் பல சர்ச்சைகளுக்கு பிறகு முடிவடைந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2 வாக்குச்சாவடி மையத்திற்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதனை எந்த கட்சிகளும் விரும்ப வில்லை.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது மகனை எப்படியாவது டெபாசிட் தொகையாவது வாங்கச் செய்ய வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றே தற்போது இங்கு மறுதேர்தல் நடத்தப்படுகிறது.

கடைசி கட்ட தேர்தல் நடந்து வரும் நிலையில் மோடி 20 மணி நேரத்துக்கு மேலாக குகையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். அவர் குகையிலேயே இருப்பதுதான் இனி நாட்டு மக்களுக்கு நல்லது.

வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்தியாவில் ராகுல்காந்தி அடுத்த பிரதமராக பதவி ஏற்பார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். இந்த மாற்றத்தை எதிர்பார்த்துதான் தமிழகத்திலும் இந்தியாவிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories