அரசியல்

மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு இது - காங்கிரஸ் குற்றசாட்டு!

பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏதுவாகவே இன்று இரவு 10 மணி முதல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு இது - காங்கிரஸ் குற்றசாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "பாஜக ரவுடிகளை தண்டிப்பதை விட்டுவிட்டு ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் தண்டித்துள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஆதரவாகவே தொடர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்துள்ளது. இதன்மூலம் நேர்மையாகவும், நியாமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.

ஒருநாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் ஏன் இரவு 10 மணியை தேர்வு செய்தது. மோடி இன்று மாலை மதுராபூர், டம் டம் இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏதுவாக இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு. 23 ஆம் தேதியோடு மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகிவிட்டது." இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories