அரசியல்

ஆளுங்கட்சிக்கு ஒரு விதி, எங்களுக்கு ஒரு விதியா ?- தேர்தல் கமிஷனுக்கு ஸ்டாலின் கண்டனம்!

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பரப்புரை நிறுத்தப்பட்டது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சிக்கு ஒரு விதி, எங்களுக்கு ஒரு விதியா ?- தேர்தல் கமிஷனுக்கு ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்கம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலப்பிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 7ம் கட்ட தேர்தலாக மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவுள்ளது.

இதற்காக நாளை மாலையுடன் தேர்தல் பிரசார பணிகள் ஓய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 7ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள 59 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பிரசாரங்கள் நாளையும், மேற்கு வங்கத்தின் 9 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இரவு 10 மணியுடனும் நிறைவடைகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், “மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் ஒரு நாளைக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டது பாரபட்சமானது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஒரு விதியையும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியையும் வைத்து செயல்படுவது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியது போன்று, மேற்கு வங்கத்தில் வித்யாசாகரின் சிலையையும் பா.ஜ.க.,வினர் சேதப்படுத்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories