அரசியல்

தமிழிசை கூறியது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகும் - நாராயணசாமி பேட்டி !

திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாஜகவுடன் பேசிவருவதாக தமிழிசை கூறியது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தமிழிசை கூறியது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகும் - நாராயணசாமி பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தீவிரவாதம் ஒரு மதத்தை சார்ந்தது இல்லை. எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர். கோட்சே இந்து மதத்தை சேர்ந்தவர். மகாத்மா காந்தியை கொன்றதாக தண்டிக்கப்பட்டு உள்ளார். கமல்ஹாசன் எந்த நோக்கத்தில் பேசினார் என்று தெரியவில்லை. தீவிரவாதம் எல்லா மதத்திலும் எல்லா நாட்டிலும் இருக்கிறது.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகளுக்கு தேர்தலை பொறுத்தவரை எந்த பிரச்சனை கிடையாது. மதத்தை வைத்து ஆரசியல் செய்கின்றனர். இந்து மதத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை முன் வைத்து மக்களிடம் பிர்ச்சாரம் செய்யப்படுகிறது. பா.ஜ.க. ஆட்சி மோடி தலைமையில் 5 ஆண்டுகள் நடந்தது. அதில் செய்த சாதனைகளை குறித்து மக்களிடம் பேசாமல் எதிர்கட்சிகளை சாடுவதும் தலைவர்களை இழிவுப்படுத்தி பேசுகின்றனர்.

தரம் தாழ்ந்த அரசியலை பிரதமர் செய்துக் கொண்டு இருக்கிறார். மோடி செய்யும் பிரச்சாரத்தை கண்டும் உலகத்தில் உள்ள மக்கள் சிரிக்கின்றனர். புதிய விஞ்ஞானி போல் பிரதமர் பேசுகின்றார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு செய்தது பணமதிப்பு இழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.வரி. இவை கொண்டு வந்து நாட்டை குட்டிசுவராக்கிவிட்டார். மக்களிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்டு வருகிறார். ஆனால் மக்கள் மோடியை நிராகரிக்க தயாராகி விட்டனர். சாதனையை சொல்ல முடியாததால் மதத்தை சொல்லி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. கனவு காண்கிறது.

தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடியின் கருத்து அவரது புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம். இந்துவாக இருந்தால் தீவிரவாதியாக இருக்க மாட்டார்கள் என்றால் மற்ற மதத்தினர் தீவிரவாதிகளா...எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். பா.ஜ.க.வின் தத்துவமே நாடு முழுவதும் இந்துவாக இருக்க வேண்டும் என்பது தான் அதன் அடிப்படையில் பிரதமர் பேசுகின்றார். இந்தியாவின் இறையாண்மை, சமுத்துவம் சகோதரத்துவம் என்பதை பா.ஜ.க. மாற்ற நினைக்கிறது. கோட்சே எந்த மதத்தை சேர்ந்தவர். அவர் என்ன ஜப்பான், சீனாவை சேர்ந்தவாரா? காந்தியை கொன்ற கோட்சே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

தமிழிசை என்ன பேசிகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதமராக பிரகடனம் செய்தவர். அவர் எப்படி பா.ஜ.க.வுடன் பேசமுடியும். தமிழிசை கூறியது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகும். சந்திரசேகர ராவ் சந்தித்தில் தவறு இல்லை. மோடியை கூட ராகுல்காந்தி சந்திக்கிறார்.அதற்காக கூட்டணி வைத்துக் கொள்ள முடியுமா. யூகங்களுக்கு இடமளிக்க கூடாது. தமிழிசை கூறியது வடிகட்டிய பொய். இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories