அரசியல்

“டிக்‌ஷ்னரியில் இடம்பெற்ற புதிய வார்த்தை” : மோடியை கிண்டல் செய்த ராகுல்!

மோடியின் பொய்களை கிண்டல் செய்யும் விதமாக, ‘ModiLie’ எனும் வார்த்தை ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் புதிதாக சேர்ந்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

“டிக்‌ஷ்னரியில் இடம்பெற்ற புதிய வார்த்தை” : மோடியை கிண்டல் செய்த ராகுல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், வகைதொகையில்லாமல் பொய்களை அள்ளி வீசினார். அதைக் கிண்டல் செய்யும் விதமாக, ‘ModiLie' எனும் வார்த்தை ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் புதிதாக சேர்ந்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அந்தக் குறிப்பிட்ட பேட்டியில் மோடி, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடைபெற்ற பால்கோட் தாக்குதலின்போது, மேகமூட்டத்திற்கிடையே விமானத் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் ரேடாரில் இருந்து தப்பித்துவிடலாம் என இராணுவத்துக்கு ஐடியா கொடுத்ததாகத் தெரிவித்தார்.

மேலும், 1980-களிலேயே தான் டிஜிட்டல் கேமரா வைத்திருந்ததாகவும், இ-மெயிலை பயன்படுத்தியதாகவும் சகட்டுமேனிக்கு பொய்களை அள்ளிவிட்டார். மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வென்ற மோடியிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

மோடியின் சமீபத்திய பொய்கள் சமூக வலைதளங்களில் பெரும்பான்மையானோரால் கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில், காங். தலைவர் ராகுல் காந்தி, ‘ModiLie’ எனும் வார்த்தை ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாக கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories