அரசியல்

ஜனநாயகத்தைக் கொன்ற மோடி மே 23-ல் ஆட்சியிலிருந்து வெளியேறுவார் : சந்திரபாபு நாயுடு உறுதி!

நாட்டின் ஜனநாயகத்தைக் கொன்றதற்கு மோடி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்படப் போகும் நாள்தான் மே-23 என சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தைக் கொன்ற மோடி மே 23-ல்  ஆட்சியிலிருந்து வெளியேறுவார் : சந்திரபாபு நாயுடு உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்துத் தெரிவித்த புகாருக்குத் தனது விக்கெட்டை இழந்ததற்கு நடுவரைக் குறை கூறுவது போல் உள்ளதாக விமர்சித்தனர் பா.ஜ.க-வினர். அதற்குப் பதிலடி தரும் வகையில் தற்போது சந்திரபாபு நாயுடு மோடி குறித்த கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது : “நடைபெற்று வரும் மக்களவையில் தேர்தலில் மோடி ஆட்சியை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள். ஜனநாயகத் தன்மையின்றி, சர்வாதிகாரத் தன்மையுடன் ஆட்சி செய்யும் பா.ஜ.க அணி தோல்வியடையும். பிரதமர் மோடி அவரது அரசியல் ஆதாயத்திற்காக இராணுவத்தையும், பாதுகாப்புத் துறையையும் தவறாகப் பயன்படுத்தி உள்ளார்.தேசத்தில் மத மோதல்களை உருவாக்குகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு ஜனநாயக அமைப்புகள் அனைத்தையும் மோடி சீரழித்து மோசமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்.

நாட்டின் ஜனநாயகத்தைக் கொன்றதற்கு மோடி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்படப் போகும் நாள்தான் மே 23. அதனை மக்களே முன்னின்று செய்வார்கள். தேர்தல் ஆணையும் பா.ஜ.க-வின் உத்தரவுகளைப் பெற்று அதனைச் செயல்படுத்தும் ஆணையமாகவே செயல்படுகிறது. மோடி, அமித்ஷா தேர்தல் விதிகளை மீறினாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்த ஆணையம் எடுப்பதில்லை. இந்த உண்மையை நாடே பார்க்கிறது.

மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார். அழிந்தவர்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்வார். இவ்வாறு பல அரசியல் தலைவர்களை அழித்துள்ளார்" என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories