அரசியல்

மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் சுற்றுப்பயண செலவு ரூ.393 கோடி : RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்

பா.ஜ.க.வின் 5 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களுக்காக ரூ.393.58 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் சுற்றுப்பயண செலவு ரூ.393 கோடி : RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களை மும்பையைச் சேர்ந்த ஒருவர் கோரி இருந்தார்.

அதன் அடைப்படையில் அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் 2014-15-ம் நிதியாண்டு முதல் 2018- 19-ம் நிதியாண்டு வரை மேற்கொண்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.263 கோடியும், உள்நாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.48 கோடியும் செலவிட்டுள்ளனர்.

மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் சுற்றுப்பயண செலவு ரூ.393 கோடி : RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்

மத்திய இணை அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.29 கோடியும், உள்நாட்டுப் பயணங்களுக்கு ரூ.53 கோடியும் செலவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 2014-15ம் நிதியாண்டில் மட்டுமே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வெளிநாடு, உள்நாட்டு பயணங்களின் போது ரூ.88 கோடி செலவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் மோடி 49 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories